India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரும் மன்னை எக்ஸ்பிரஸ் (Train No.16179) இன்று (டிச.2) இரவு 10:55 பதிலாக 11:55 மணிக்கு புறப்படும் என ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக இன்று புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட் கிழமையை முன்னிட்டு பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். இதில் சுமார் 282 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மனுக்கள் மீதான நடவடிக்கை உடனே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமரங்கோட்டை அடுத்த கரிசல்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த, திருவாரூர் கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த துர்க்கை அம்மாள் கணவர் சுப்பிரமணியனிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததை அடுத்து 20 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 88.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓகைப்பேரையூரை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் கடந்த நவ.29 விஷம் அருந்தியதால் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய நண்பர்களான தமிழ்ச்செல்வன் (25), குமரன் (24), பாலமுருகன் (21), அஜித்குமார் (29) ஆகியோர் சிகிச்சை சரியாக அளிக்கவில்லை என பெண் பயிற்சி மருத்துவரான நிவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் பிறப்பதற்கு கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது விவரங்களை குழந்தை மையங்களில் பதிவு செய்து அங்கு அளிக்கப்பட்டு வரும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 50-60 கீ.மி வரையிலும், அவ்வப்போது 70 கீ.மி வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பயிர் காப்பீடு செய்யும் தேதி இன்று நிறைவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை அரசின் உத்தரவின்படி மழை மற்றும் வெள்ள நிவாரணங்கள், விவசாயிகளை பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு, தொடர்ந்து பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நவ.15 நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவ.30 வரை நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைகிறது. SHAREIT
திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருந்தார். இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு காரணங்கள் கருதி குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்படுவதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை (நவ.30) திருவாரூர் நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மற்றும் மத்திய பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.