Thiruvarur

News May 26, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்கிற இணைய தளத்தில் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News May 26, 2024

திருவாரூரில் நெல் திருவிழா

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் ஜெயராமன் ஆராய்ச்சி மையம் சார்பில் ஜூன் 22 ஆம் தேதி திருத்துறைப்பூண்டி தனியார் அரங்கில் தேசிய நெல் திருவிழா நடைபெற உள்ள நிலையில். இந்த நிகழ்வில் பங்கெடுப்பதற்காக நெல் ஜெயராமன் பண்ணை தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ் மாவட்ட எஸ்பி-யை நேரில் சந்தித்து நேற்று அழைப்பிதழ் வழங்கினார்.

News May 25, 2024

காத்தவராயன் சாமியை தூக்கி தீ மிதித்த பக்தர்கள்

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்தில் விழா இன்று நடைபெற்றது. காத்தவராயன் சுவாமியை தூக்கிக்கொண்டு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News May 25, 2024

பழங்குடியின மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளி நாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணையவழியில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

News May 25, 2024

திருவாரூர்: பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கைது

image

குடவாசல் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரான மதுசூதனன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்கட்சி பிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

News May 25, 2024

திருவாரூர்: பாதுகாப்பு பணி… ஆய்வுசெய்த எஸ்பி

image

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில்
தெப்ப திருவிழாவின் இறுதி நாளான நேற்று (மே 24) பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கக் கூடும் என்பதால் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெப்பம் செல்லக்கூடிய கமலாலய குளத்தின் நான்கு கரைகளை நேரில் ஆய்வு செய்து, பணியில் இருந்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

News May 24, 2024

திருவாரூர் அருகே 4 பேர் கைது

image

நன்னிலம் வட்டம் பேரளம் காவல் உதவி ஆய்வாளர் காந்தி கோவிந்தஞ்சேரி பகுதியில் இன்று வாகன சோதனை ஈடுபட்டிருந்தார். அப்போது காரைக்காலிருந்து ரகுமாத்திரன் என்பவர் ஒட்டி வந்த காரை மறித்து சோதனை செய்த பொழுது அதில் 92 பாண்டிச்சேரி மது பாட்டில்கள், 19 லிட்டர் பாண்டி சாராயம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரகுமாத்திரன் ராஜேந்திரன்,ராஜேஷ், பாண்டியன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

News May 24, 2024

திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று(மே 23) நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 21 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அந்தந்த போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

News May 24, 2024

விவசாயிகளுக்கு திருவாரூர் கலெக்டர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருத்தி பயிர் 39,710 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக பருத்தி வயல்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. நீர் தேங்கி இருப்பதால் பருத்திப் பயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திட அதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி நீரை வடிய வைத்து பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.

News May 24, 2024

திருவாரூர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சிமிலி பகுதியை சேர்ந்த ஜோதிவேல் என்பவருடைய மனைவி ஆனந்தவல்லி(64). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று(மே 23) மோகன் என்பவரது வயலில் கத்தரிக்காய் பறிக்கும்போது விஷமுள்ள பாம்பு கடித்து ஆனந்தவல்லி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.