Thiruvarur

News October 3, 2024

கூத்தாநல்லூரில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

image

கூத்தாநல்லூரில் புறா வளா்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு. லெட்சுமாங்குடியை சோ்ந்த முகம்மது அப்துல்லா (42) என்பவருக்கும் சுப்பிரமணியன் (47) என்பவருக்கும் புறா வளா்ப்பதில் ஏற்பட்ட தகராறில் நேற்று சுப்பிரமணியன் அரிவாளால் அப்துல்லாவை தலையில் வெட்டியுள்ளாா். பின்னர் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். போலீஸாா் சுப்பிரமணியனை கைது செய்தனா்.

News October 3, 2024

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் இன்று திருவாரூர் வருகை

image

திருவாரூர்: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் இன்று 03.10.24 (வியாழக்கிழமை ) மாலை 3.00 காட்டூரில் உள்ள கலைஞர் கோடட்ட்கத்திற்கு வருகை தர உள்ளார். திருவாரூர் வருகை தரும் அமைச்சரை வரவேற்க திருவாரூர் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 2, 2024

குழந்தை திருமணம் எதிர்ப்பு விளம்பர பலகை

image

திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள ஆலத்தம்பாடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் நாகை எம்பி செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குழந்தை திருமணம் எதிர்ப்பு குறித்த விளம்பர பலகைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

News October 2, 2024

தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு காதி மற்றும் கதர் கிராம தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் நடைபெற்ற தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை ஆட்சியர் சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

News October 2, 2024

மன்னார்குடியில் இலவச திருமணம் செய்ய அழைப்பு

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை அறிவிப்பின் படி மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயிலில் வரும் 21ஆம் தேதி இலவச திருமண நிகழ்வு நடைபெற உள்ளது. தகுதியுள்ள இணையருக்கு 4 கிராம் தங்கத்தாலி ரூ.60,000 பெறுமான சீர்வரிசை வழங்கப்படும். எனவே தகுதியுடைய பொருளாதாரத்தில் பின்தங்கிய இணையர்கள் நாளை முதல் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ள கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

News October 2, 2024

ஆலத்தம்பாடி வருகை தரும் கலெக்டர்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலத்தம்பாடி ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க உள்ளார்.

News October 1, 2024

திருவாரூரில் ரூ.30% தள்ளுபடி – அறிவிப்பு

image

திருவாரூர் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர்
சாரு ஸ்ரீ தீபாவளி விற்பனையாக ரூ.36 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கூறியதாவது 11 மாத சேமிப்பு சந்தா தொகை செலுத்தினால் 12 ஆவது மாத சந்தா தொகையை கோஆப்டெக்ஸே செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

News October 1, 2024

திருவாரூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், கலைஞர் வீடு கணக்கெடுப்பு, தூய்மை இந்தியா போன்ற தலைப்புகளில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

News October 1, 2024

திருவாரூரில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

திருவாரூர் மாவட்டத்தில் நாளை காந்தி ஜெயந்தி முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். நாளை டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் எப் எல் 2, எப் எல் 3 பார்களையும் மூட வேண்டும். மீறி விற்பனை செய்தால் விற்பனையாளர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

News October 1, 2024

தேசிய போட்டிக்கு தேர்வான திருவாரூர் மாணவர்

image

திருவாரூர், வாழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் கே. சபேஷ் என்கிற மாணவர் மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து தகுதிப்போட்டியில் தேர்வாகி காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார். மாணவர் சபேஷ்க்கும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் வினோத் வினோத்துக்கும் சார்பாக தாளாளர், முதல்வர், வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!