India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீடாமங்கலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 2000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் நவீன சேமிப்பு கிடங்கில் சேகரித்து அங்கிருந்து லாரிகள் மூலம் நீடாமங்கலம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியோகத்திற்கு எடுத்து செல்லப்படும். நேற்று மாலை திருநெல்வேலிக்கு 42 வேகன்களில் 2000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
பேரளம் அருகே காரைக்கால் – பெங்களூரு செல்லும் ரயில் நேற்று காலை 6 மணிக்கு கொத்தவாசல் என்ற இடத்தில் சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த என்ஜின் டிரைவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் முதலீட்டுத் தொகையில் 40% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயன் அடைய விரும்புபவர்கள் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE NOW
திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி, காரைக்குடி வழியாக தீபாவளி சிறப்பு ரயில் ஏதேனும் விடுவார்களா?. தற்காலிகமாக ஓடும் தாம்பரம் டு ராமேஸ்வரம் வாரம் மும்முறை ஏற்கனவே ஃபுல்லாக உள்ளது. இதை கருத்தில் கொண்டூ ஏதேனும் சிறப்பு ரயில் தீபாவளிக்கு விட்டாள் ,அப்பகுதி மக்கள் சென்னையில் இருந்து தீபாவளிக்கு ஊர் திரும்புவதற்கு உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம் ரவுடி கட்டைபிரபு அருண்பிரபு என்பவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் ஆயுதச்சட்டம், திருட்டு இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்தநிலையில்அருண்பிரபு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி சிறையில் .அடைக்கப்பட்டார்.
மன்னார்குடியை சேர்ந்த ராகேஷ் தனது நண்பர்கள் விஜய் பிரேம்குமார் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் இரவு சுற்றுலா சென்றார். பிரேம்குமார் மற்றும் நண்பர்கள் காரிலும் ராகேஷ், விஜய் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். கார் பள்ளங்கி கோம்பை என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராகேஷ் உயிரிழந்தார்.
எடையூர் காவல் சரகம் பின்னத்தூர் ECR சாலை வளைவில் அருகே இன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி தெரிந்தால் முத்துப்பேட்டை டிஎஸ்பி அலுவலகம் 9498100897, காவல் நிலையம் 9498100899, சப்இன்ஸ்பெக்டர் சதிஷ் 9003952291 ஆகிய எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் என போலீசார் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் புத்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் இதில் புத்தாக்க மேம்பாட்டு திட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
தெற்குமாங்குடியை சேர்ந்த வள்ளியப்பன் நேற்று மாலை கொரடாச்சேரியிலிருந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் அப்போது திருவாரூர் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கொரடாச்சேரி செல்லும் சாலையில் திரும்பிய போது எதிரே வந்த டிராக்டர் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் தடுமாறி கீழே விழுந்த வள்ளியப்பன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.டிராக்டர் ஓட்டுநர் வீரையனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர், முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் காரைத்திடல், கோவிலூர்,உப்பூர், பகுதிகளில் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் நிலவியது .கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முத்துப்பேட்டை அருகே ஜாம்புபனோடை தடுப்பணை,வீரன்வயல் பாமணி ஆறு பகுதிகளில் உள்ள தடுப்பணை மதக்குகள் திறந்தனர். கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.