Thiruvarur

News October 22, 2024

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சி

image

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை கறவை மாடு வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி, கால்நடை மருத்துவா் சபாபதி ஆகியோா் தெரிவித்துள்ளனா். இதில் கால்நடை மருத்துவ துறை வல்லுநா்கள் பங்கேற்று கால்நடை வளர்ப்பு, தீவன சிக்கன மேலாண்மை, கறவை மாடுகளை தாக்கும் நோய்களை தடுக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்து ஆலோசனை வழங்கயுள்ளனர். SHAREIT

News October 22, 2024

சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கபடுகிறது. இந்நிலையில் சீா்மரபினா் நல வாரியத்தில் சேர, உறுப்பினா் சோ்க்கை முகாம் அக்.24 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 21, 2024

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (21.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க மற்றும் காவல் துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் எனத் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 21, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்தல், உரத்துடன் கூடுதலாக விவசாயிகளுக்கு விருப்பமில்லாத இடு பொருட்களை வாங்க கட்டாயம் போன்றவற்றில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாரூஸ்ரீ எச்சரித்துள்ளார். இதுகுறித்து புகார் தெரிவிக்க பத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 

News October 21, 2024

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று 21-10-2024 வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

முத்துப்பேட்டை அருகே முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

image

முத்துப்பேட்டை தாலுகா, மண்ணுக்குமுண்டான் தாடிபாலத்தில் நேற்று 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனியாக நடந்து சென்றபோது, ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த சகாய இருதையராஜ் என்பவர் வழிமறித்து அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்ததையடுத்து எஸ்.ஐ. ரூபாவதி மற்றும் போலீசார் சகாய இருதையராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தார்.

News October 21, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 112 பேர் கைது

image

திருவாருர் மாவட்டத்தில் அக்.19, 20 ஆகிய இரு தினங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, மது, குட்கா, லாட்டரி விற்பனை மற்றும் மணல் கடத்தல், சூதாட்டம் என மொத்தம் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்ற செயல்களில் தொடர்புடைய மொத்தம் 112 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என திருவாரூர் மவ்வட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News October 21, 2024

திருவாரூர் மாவட்டத்தில் போதையில் பைக் ஓட்டிய 88 பேர் மீது வழக்கு

image

திருவாருர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி அனைத்து காவல் சரகத்திலும் போலீசார் நடவடிக்கையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுபோதையில் இருசக்கரவாகனம் ஓட்டிவந்தவர்கள் மீது போலீசார் மொத்தம் 88 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News October 20, 2024

திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

திமுக செயல்படுத்தவில்லை: முன்னாள் அமைச்சர் காமராஜ்

image

மன்னார்குடியில் நேற்று இரவு அதிமுக சார்பில் 53 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு, தமிழகத்தில் அம்மா கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் திமுக தற்பொழுது செயல்படுத்தவில்லை என்று கூறினார். மேலும் இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

error: Content is protected !!