India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதன் இறுதிக் கட்டத்தை எட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்று (டிச.30) மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக கரட் கருண் உத்தவ் ராவ் நியமனம் செய்ப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர் மதுரை காவல் துணை ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவாரூர் எஸ்.பி-யாக இருந்த ஜெயக்குமார் கடலூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷேர் செய்யவும்!
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (29.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை இயக்கப்படும் டெமு ரயிலின் நேரத்தை மாற்றியமைக்கும் படி பயணிகள் பலர் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி வரும் ஜன.1-ஆம் தேதி முதல் பட்டுக்கோட்டை- திருவாரூர் டெமு ரயில், பட்டுக்கோட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு பதிலாக மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு திருவாரூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரடாச்சேரி கமலாபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி (70). விவசாயத் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கமலாபுரம் கடைவீதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஓட்டுநர் மோகனை
போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (28.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரவாஞ்சேரி அடுத்த கூந்தலூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்கிற இளைஞர் சிறுவயதில் இருந்து காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணை ஏமாற்றி அவருக்கு அடிபணிய வைத்துள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியதால் தமிழ்வாணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கமலாபுரம் அருகே பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் தேநீர் அருந்துவதற்காக குடிப்பதற்காக கமலாபுரம் கடைவீதிக்கு வந்துள்ளார். அப்பொழுது திருவாரூரில் இருந்து வேகமாகச் சென்ற லாரி மணிகண்டன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மோகனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வரும் ஜன.2 முதல் TNPSC குரூப்-4 தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகளுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ,11, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 6 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை காலை மாலை என இரு வேளையும் நடைபெற இருக்கிறது. இதற்கான கால அட்டவணையை திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.