Thiruvarur

News October 26, 2024

திருவாரூர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூா் மாவட்டத்தில் பசுந்தீவன வளா்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். 2024-25-ஆம் நிதி ஆண்டிற்கு கால்நடை பராமரிப்புத்துறையால், மாவட்டத்தில் பாசனவசதியுள்ள இடங்களில் பசுந்தீவன சாகுபடி 20 ஏக்கரிலும், மானாவாரி நிலங்களில் 50 ஏக்கரிலும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

News October 25, 2024

வலங்கைமான் வெடி கடைகளில் எஸ்.பி ஆய்வு 

image

 வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வெளிக்கடைகளில் இன்று இரவு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெடி கடைகளில் தீயணைப்பு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் வலங்கைமான் போலீசார் உடனிருந்தனர். 

News October 25, 2024

திருவாரூர் மாவட்டம் பற்றிய முக்கிய தகவல்கள்

image

திருவாரூர் மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 82.86 ஆகும். இதில் ஆண்களின் படிப்பறிவு விகிதம் 89.13-ம், பெண்களின் படிப்பறிவு விகிதம் 76.72-ஆகவும் உள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மாவட்டத்தில் இந்துக்கள் 89.60 சதவீதமும், இஸ்லாமியர்கள் 7.60 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2.63 சதவீதமும் உள்ளனர். ( தகவல்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

News October 25, 2024

மேற்குறையை பிரித்து திருட்டு

image

மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்ற அவர், பேக்கரியின் ஓடுகள் உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ரூபாய் 30,000 திருடு போனது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

News October 24, 2024

திருவாரூரில் உலக போலியோ தின விழிப்புணர்வு

image

திருவாரூரில், திருவாரூர் ரோட்டரி சங்கத்தினால் நடத்தப்பட்ட உலக போலியோ தின விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன், திருவாரூர் வார்டு கவுன்சிலர் அகிலா சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News October 24, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 37 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி

image

திருவாரூரில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. 36,960 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இலக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு முன்னோடி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

News October 24, 2024

திருவாரூரில் மத்திய அமைச்சர்

image

திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ‘ரிசர்ச் ப்ராஸ்பெக்டஸ் இன் ஸ்கூல் சைக்காலஜி’ என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதனை மத்திய ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் தொடங்கி வைப்பதற்காக இன்று அதிகாலை திருவாரூர் வந்தடைந்தார். அவரை பாஜகவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

News October 23, 2024

திருவாரூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று (23.10.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை காவல்துறையினருக்கு தெரிவித்தார்.

News October 23, 2024

நாளை திருவாரூர் வரும் மத்திய அமைச்சர்

image

திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘ரிசர்ச் ப்ராஸ்பெக்டஸ் இன் ஸ்கூல் சைக்காலஜி’ என்ற தலைப்பில் அக்.24-26 ஆம் தேதி வரை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நாளை (அக்.24) தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

News October 23, 2024

திருவாரூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

image

திருவாரூரில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வடுவூர். இங்கு தான் உலக புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் 38 வகைகளை சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து பறவைகள் வடுவூருக்கு இடம் பெயர்கின்றன. திருவாரூர் மாவட்டத்தில் குடும்பத்தோட சுற்றுலா செல்ல இது ஒரு அருமையான இடம். ஷேர் செய்யவும்

error: Content is protected !!