India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரகத் திறனாய்வுத் தேர்வு தற்போது நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக 14 /12/ 2024 சனிக்கிழமை அன்று நடைபெற இருந்த நிலையில் மாணவர் நலன் கருதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தினை மேம்படுத்தும் வகையில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு 1 வரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் தொடங்கிய மழை இன்று வரை விடாது மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளிகளில் நடக்கும் அரையாண்டு தேர்வு மழைக்காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று நடக்கவிருந்த ஆங்கில தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (11.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐயில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு ஆட்டோமேஷன், எலக்ட்ரிக் வாகன பழுது பார்ப்பு, ஏசி டெக்னீசியன், வயர்மேன் ஆகிய 4 பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு திருவாரூர் திறன் பயிற்சி அலுவலக சேர்க்கை உதவி மையம் அல்லது 042366227411, 9486592295 என்ற எண்ணில் கூடுதல் தகவல் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி நகர பகுதி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த திருத்துறைப்பூண்டியை சேர்நத சந்தோஷ், வீரமோகன் ஆகிய இருவரை மன்னார்குடி போலீசார் சோதனை செய்தனர். அப்போது இருவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கீரனூர், அக்கரைதோப்பு பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் அதே பகுதியை சேர்ந்த பக்ரிதாஸ் என்பவரால் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பக்ரிதாஸ் பேரளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பக்ரிதாஸ் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
மன்னார்குடி நகர பகுதி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த திருத்துறைப்பூண்டியை சேர்நத சந்தோஷ், வீரமோகன் ஆகிய இருவரை மன்னார்குடி போலீசார் சோதனை செய்தனர். அப்போது இருவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினரால் குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வரும் டிச.18 (புதன்கிழமை) ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மற்றும் ரூ.1000 முன்பணம் செலுத்தி அன்றைய தினம் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.