India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 45 வயது உள்ள ஆண்களுக்கான இலவச சிசிடிவி கேமரா பயிற்சி முகாம் வரும் டிச.26 தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04366-299014, 9952577595 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருவாரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 45 வயது உள்ள ஆண்களுக்கான சிசிடிவி கேமரா பயிற்சி முகாம் வரும் டிச.26 தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04366-299014, 9952577595 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. இந்நிலையில் வருகிற டிச.16 (திங்கள்) முதல் டிச.18 (புதன்கிழமை) வரை திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதக்குடி பகுதியில் தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் வெர்ஜினியா மற்றும் காவலர்கள் பொதக்குடி பகுதியில் தொடர்ந்து ரோந்து செய்து வந்த நிலையில் சந்தேகமான முறையில் திரிர்ந்த முகமது பக்ருதீன், கமாலுதீன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி விற்பனை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பெயரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கொரடாச்சேரியைச் சேர்ந்த தங்கம், மன்னார்குடியை சேர்ந்த செந்தில்குமார், ராஜேந்திரன், நீடாமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கோவிந்தராஜ், ஆனந்தன், பாண்டியன், ஜெகதீஷ், பாபு உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட அளவிலான திருக்குறள் போட்டிகள் வருகின்ற டிச.24-ஆம் தேதி, 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. பின்னர் டிச.27-இல் அனைத்து வயதினருக்கான பேச்சு போட்டியும், டிச.30 வினாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9444523125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என்றும், அதற்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் உள்ள ஆறு உண்டியல்கள் என்னும் பணி இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சொரிமுத்து தலைமையில், அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவிகள் பக்தர்களின் காணிக்கைகளை எண்ணினர். அதில் மொத்தமாக 17 லட்சத்து 52 ஆயிரத்து 234 ரூபாய் ரொக்கமும், 158.200 கிராம் தங்கமும், 300.400 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்களால் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
கூத்தாநல்லூர் அடுத்த கீழ்பாதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (42). இவர், டிப்பர் வாடைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் குன்னியூர் பகுதியைச் சேர்ந்த அருண்தாஸ் 6 மாதத்துக்கு டிப்பரை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், வாடகையையும், டிப்பரையும் திருப்பிக்கொடுக்காமல் அருண்தாஸ் இருந்துள்ளார். போலீசார் விசாரணையில் அவர் டிப்பரை அடகு வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.