Thiruvarur

News December 23, 2024

இபிஎஸ்-யை விமர்சித்த முத்தரசன்

image

திருவாரூர் வருகை தந்த சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, “தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தாலும் அந்த சம்பவங்களுக்கு உடனடியாக முதல்வர், காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த காலங்கள் போன்று தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக முதல்வர் கூறவில்லை” என தெரிவித்தார்.

News December 23, 2024

மன்னார்குடியில்  2 பேர் கைது

image

மன்னாா்குடி மேலப்பாலத்தில் தனியார் வாடகை லாரிகள் நிறுத்தும் இடத்தில் உள்ள மின் மோட்டாரில் இணைக்கப்பட்டிருந்த 25 மீட்டர் மின் வயரை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பதாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.விசாரணையில் வாஞ்சியுரை சோ்ந்த 18 வயது சிறுவன்,காலணி தெருவைச் சேர்ந்த கதிரவன் ஆகியோரை கைது செய்தனர்.

News December 23, 2024

முத்துப்பேட்டையில் ரூ.3.84 கோடியில் புதிய கட்டடம்

image

முத்துப்பேட்டை ரயில் நிலையம் அருகே பல்வேறு வசதிகளுடன் ரூ.3.84 கோடியில் ஒன்றிய அலுவலக கட்டடம் புதிதாக தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புதிய ஒன்றிய அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையில் இருந்து இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி நேற்று இரவு இந்த புதிய கட்டடம் மின்விளக்குகளால் ஜொலித்தது.

News December 22, 2024

திருவாரூரில் ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (22.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2024

பிட்காயின் மூலம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மோசடி

image

மன்னார்குடி, கருவாக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ் ஆன்லைனில் திருமண தகவல் நிலையத்தில் தன்னுடைய மகனுக்கு திருமண வரன் வேண்டி பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த சுவேதா என்ற பெண் ஆன்லைனில் அவரை தொடர்பு கொண்டு பிட்காயின் மூலமாக முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது சம்பந்தமாக சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 22, 2024

குடவாசல்: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது

image

குடவாசல் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற இளைஞர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இது சம்பந்தமாக சிறுமியின் தாய் குடவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் குடவாசல் காவல் துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 22, 2024

வலங்கைமான்: விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு

image

வலங்கைமான் அருகே சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. இவருடைய கணவர் பாலு. பாலு நேற்று தனது வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு பில் அறுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாதவரை உறவினர்கள் தேடிய போது வயலில் சடலமாக கிடந்துள்ளார். இதையறிந்த வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News December 22, 2024

திருவாரூர்: கைவினை கலைஞர்களுக்கு சிறப்பு கடன்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட தொழில் மையம் மூலம் ‘கலைஞா் கைவினைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற வங்கிக் கடனுதவி மற்றும் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியம் பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க 35 வயது நிரம்பிய கைவினை கலைஞராக இருத்தல் வேண்டும். மேலும் தகவலுக்கு 89255-34014 என்ற எண்ணை தொடரபு கொள்ளலாம்.

News December 21, 2024

சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பிகளுக்கு விருது

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பிகளுக்கு இன்று விருது வழங்கி கௌரவித்தார். இதில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பழனிசாமி, பயிற்சி டிஎஸ்பி பவானியா, நன்னிலம் டிஎஸ்பி பாஸ்கரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி எஸ்பி ஜெயக்குமார் சிறப்பித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

News December 21, 2024

திருவாரூரில் முகநூல் மூலமாக ரூ.26 லட்சம் மோசடி

image

திருவாரூர் பகுதியை சேர்ந்த ஹேமலதாவை முகநூலில் (பேஸ்புக்) தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பரிசுப் பொருட்கள் அனுப்பி வைப்பதாக, ஆசை வார்த்தைகள் கூறி ஹேமலதாவிடம் இருந்து ரூ.26.23 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து எந்த தகவலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹேமலதா, மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரிடம் நேற்று அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!