Thiruvarur

News March 18, 2025

திருவாரூர் ஆழித்தேர் அதிசயங்கள்

image

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியதாகும். பூதப்பார், சிறு உறுதலம், பெரிய உறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் என 7 அடுக்குகளைக் கொண்ட தேரின் 4ஆவது அடுக்கில்தான் தியாகராஜர் வீற்றிருப்பார். மேலும் குந்தியாலம், கொடியாலம், பாம்பு பாலம் உட்பட மொத்தம் 92 அலங்காரங்கள் தேருக்குச் செய்யப்படும். தியாகராஜர் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 18, 2025

கோடை வெயிலில் தற்காத்துக் கொள்ள கலெக்டர் அறிவுரை

image

திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருக்கிறது. எனவே வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்ற ஜூஸ்கள் அருந்த வேண்டும், முதியோர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வழங்கியுள்ளார். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..

News March 17, 2025

Way2News எதிரொலி: முத்துப்பேட்டை அருகே சாலை சீரமைப்பு

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் இருந்து மேலப் பெருமழை செல்லும் இணைப்பு சாலையானது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் மிகுந்த சேதமடைந்தது. இதுகுறித்து கடந்த மார்ச்.16 ஆம் தேதி Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டது. இதன் காரணமாக தற்போது சாலையோரத்தில் மண் மூட்டைகளை அமைத்து சீரமைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். SHARE NOW!

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்!

image

தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <>இதை கிளிக்<<>> செய்து மார்ச் 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 17, 2025

மன்னார்குடி செங்கமலத்திற்கு ரூ.14 லட்சத்தில் கருங்கல் சிலை

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் 50ஆண்டுகள் ஆன்மிக பணியாற்றி மறைந்த செங்கமலம் யானைக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு நிறுவப்பட உள்ள கருங்கல் யானை சிலை நேற்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை கோயில்களில் ஆன்மிக பணியாற்றி மறைந்த யானைகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: திருவாரூர் ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று முதல் 22.03.2025 வரை நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் தங்களது விவரங்களை மென்பொருளில் பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். பழைய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மீனவர்நலத்துறை அலுவலகம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நேரடியாக சென்று வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். SHARE NOW!

News March 16, 2025

சிவன் பாதம் கட்டி அருளிய தலம்

image

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் பதஞ்சலி மனோகரர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை நாளிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கம் உள்ளது. இக்கோயிலில் சிவன் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன் திருவடி காட்டி அருளிய தலம் என்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. இக்கோவில் பற்றி தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க…

News March 16, 2025

ராணுவத்தில் வேலைவாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 14, 2025

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பார்க்க வேண்டிய 10 கோயில்கள்..

image

திருவாரூர் தியாகராஜர் கோயில், எண்கண் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், திருவீழிமிழலை விழிநாதர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயில், திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில் ஆகிய கோவில்களை மிஸ் பண்ணிடாம பாருங்க! பகிரவும்..

error: Content is protected !!