India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில், மாவட்ட முழுவதும் சட்ட விரோத செயல்களான மது விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 4846 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4931 குற்றவாளிகள், கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதி அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு கடந்த டிச.14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இத்தேர்வு 01.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பில். தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் துணை மின் நிலையத்தின் இருப்பு பாதைகளில் இயங்கும் கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மறுநாள் (ஜன.4) காலை 9 மணி முதல் 5 மணி வரை திருவாரூர் கடைவீதி, தெற்கு வீதி, புது தெரு, சேந்தமங்கலம், விஜயபுரம், வாழவாய்க்கால் விளமல், மாங்குடி, கூடூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சிமிழி பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவரது மகள் கவிஸ்ரீ (13). பள்ளி விடுமுறை காரணமாக எரவாஞ்சேரியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கவிஸ்ரீ சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, விஷப் பூச்சி கடித்ததில் மயங்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எரவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில், சாலை விபத்துகளில் சிக்கி 203 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகும். 2023-ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 219 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சாலை விதிகளை சரிவர பின்பற்றி விபத்தில்லா மாவட்டமாக திருவாரூரை மாற்ற உறுதியேற்போம். SHARE NOW!
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனையானது உச்சம் தொடுவது தற்போது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் புத்தாண்டை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 100 கடைகளில் சுமார் 2 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்! ஷேர் செய்யவும்..
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் திருவாரூரில் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாரத்தான் போட்டி வரும் 7ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 6 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆதார் நகலுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
சிதம்பரம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா பேரளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் உணவு உண்ட போது, நன்னிலத்தை சேர்ந்த சீனிவாசன் என்கிற நபர் டிபன் கடையில் சட்னி வைக்கவில்லை எனக்கூறி தகராறு செய்துள்ளார். இது சம்பந்தமாக கேட்ட காவலரை சீனிவாசன் தாக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ‘வெற்றி, சந்தோஷம் மற்றும் உன்னதமான சாதனைகள் நிரம்பிய ஆண்டாக 2025 அமையட்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ரமேஷ் பணியில் இருக்கும் போது கடந்த 4.7.2023 அன்று உயிரிழந்தார். அவரது மனைவியும், வாரிசு தாரருமான கல்யாணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் நேற்று வழங்கினார். இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உடனிருந்தார்.
Sorry, no posts matched your criteria.