Thiruvarur

News January 5, 2025

கொலை முயற்சி செய்தவருக்கு சிறை தண்டனை

image

நீடாமங்கலம், சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்தி என்கிற ராஜா மற்றும் ராஜேந்திரன். இவர்கள் இருவருக்குமிடையே இடப்பிரச்சனை காரணமாக 2018 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் ராஜா என்பவர் இரும்புக் கம்பியால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த திருவாரூர் முதன்மை நீதிமன்றம், கார்த்தி என்கிற ராஜாவிற்கு 4.1/2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தது.

News January 5, 2025

அச்சுறுத்தும் திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை

image

திருவாரூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடந்த பிப்ரவரி மாதம், காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். பணிகள் சரிவர முடிக்கப்படாத காரணத்தால் இந்த சாலையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மேலும் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதால் அப்பகுதி மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். SHARE NOW

News January 5, 2025

திருவாரூர்: வெளிநாட்டில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டர், பிளம்பர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதியும், 3 வருட பணி அனுபவத்துடன் கூடிய 44 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் <>www.omcmanpower.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News January 5, 2025

கொரடாச்சேரி: சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி

image

நாகை மாவட்டம், கோட்டை வாசலை சேர்ந்த விநாயகம் (50) உள்ளிட்ட 5 பேர் சமையல் வேலைக்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொரடாச்சேரி அருகே திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்து கவிழ்ந்தில் விநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த கொரடாச்சேரி போலீசார் ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்தனர்.

News January 5, 2025

திருவாரூர் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி: கலெக்டர் தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற ஜன.24 முதல் பிப்.2 வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். புத்தக கண்காட்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்டவை மூலமாக விளம்பரம் செய்யப்படும் என்றும், அனைத்து துறை அலுவலர்களும் இதற்கு இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

திருவாரூர் எஸ்.பி எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட புதிய கண்காணிப்பாளராக நேற்று இரவு கருண் கரட் பதவி ஏற்று கொண்டார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உரிய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

திருவாரூர் மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கருண் கரட் உத்தவ்ராவ் நேற்று (ஜன.03) பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பதவி ஏற்று கொண்ட எஸ்பியை, மாவட்டம் முழுவதும் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News January 3, 2025

திருவாரூர் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் 10ஆம் தேதி அன்று வண்டி எண் 06069, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில், எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. ஷேர் செய்யவும்

News January 3, 2025

திருட்டு வழக்கில் ஈடுபட்ட 378 நபர்கள் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாவட்டத்தில் மொத்தம் 24 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 378 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து  ரூ.81.5 லட்சம் மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2025

நன்னிலம் பாஜக பொறுப்பாளர்களுக்கு வீட்டு சிறை

image

பாஜக மகளிரணி போராட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, அதில் கலந்துகொள்வதைத் தடுக்கும் விதமாக, நன்னிலம் வடக்கு ஒன்றிய தலைவர் மல்லிகா மண்ணன் மற்றும் திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் ரமாமணி பாஸ்கர் ஆகியோரை காவல் துறையினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வீட்டு சிறையில் வைத்தனர். நன்னிலம் பாஜக பொறுப்பாளர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!