India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று (ஜன.22) பொதுமக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம், விளமல் கூட்டுறவு நகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் ஜன. 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சுயவிவர குறிப்பு, ஆதார் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் இணையத்தில் முன்பதிவு செய்து படிவத்தினை பதிவிறக்கம் செய்து முகாமிற்கு கொண்டு வர வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் எக்டேர் நெல் பயிரிடப்பட்டுகிறது. அதன் வைக்கோலை காளான் உற்பத்திக்கு பயன்படுத்தினால் ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் – ரூ.8 ஆயிரம் வரை மொத்த வருமானமும், ரூ.3,000 – ரூ.4,000 வரை நிகர லாபம் கூடுதலாக பெற முடியும். மேலும் காளான் வளர்ப்பு மூலம் வைக்கோலில் உள்ள சத்துகளை பெறலாம் என நீடாமங்கலம் வேளாண் விஞ்ஞானிகள் பெரியார் ராமசாமி, திலகவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நெடுவாக்கோட்டையை சேர்ந்த நசீர் அகமது (34) என்பவர் நேற்று மதியம் தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது, பலஞ்சேரி என்கிற இடத்தில் சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடவாசல் அருகே திருவிடைச்சேரி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி குடவாசல் பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரின் வடிவழகன் தலைமையில் ஏராளமானோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வடிவழகன், விஜயராகவன் உள்ளிட்ட 78 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.24ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தொடர் மழை காரணமாக சேதம் அடைந்துள்ளது. எனவே அரசு வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் இன்று கட்டக்குடி பெண்கள் கபாடி அணி வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டதில் கட்டக்குடி விளையாட்டு கழகம் பெண்கள் அணியினர் சிறப்பாக விளையாடி, மூன்றாம் இடத்தைப் பிடித்து தமிழக அளவில் சாதனை படைத்துள்ளார்கள்.
முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று (ஜன.19) மாலை அப்பகுதியில் உள்ள வீரன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய போது அதே பகுதியைச் சேர்ந்த பாலகுமார் மற்றும் சரவணன் ஆகியோர் மது போதையில் அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியும், அவரது மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் தியாகராஜ கோவில் இந்தியாவின் மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலின் பழமை தன்மை குறித்து வியந்த திருநாவுக்கரசர் தன் பதிகத்தில் தனி பாடலே இயற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 365 லிங்கங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மட்டுமே ஆகும். நீங்கள் இங்கு சென்றது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும்
Sorry, no posts matched your criteria.