Thiruvarur

News January 20, 2025

முத்துப்பேட்டை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று (ஜன.19) மாலை அப்பகுதியில் உள்ள வீரன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய போது அதே பகுதியைச் சேர்ந்த பாலகுமார் மற்றும் சரவணன் ஆகியோர் மது போதையில் அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியும், அவரது மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 20, 2025

திருவாரூர் தியாகராஜ கோவிலின் சிறப்புகள்

image

திருவாரூர் தியாகராஜ கோவில் இந்தியாவின் மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலின் பழமை தன்மை குறித்து வியந்த திருநாவுக்கரசர் தன் பதிகத்தில் தனி பாடலே இயற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 365 லிங்கங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மட்டுமே ஆகும். நீங்கள் இங்கு சென்றது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும்

News January 20, 2025

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மின் தடை

image

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடுவூர், நீலக்குடி, பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அங்கிருந்து மின்சாரம் பெறும் வைப்பூர், பெருகவாழ்ந்தான், வலங்கைமான், கோவிந்தகுடி, ஆலங்குடி, சாத்தனுர், திருவாதிரைமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது . SHARE NOW!

News January 19, 2025

வாலிபரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு

image

திருத்துறைப்பூண்டி அரியலூர் கிராமத்தை சேர்ந்த யோகேந்திரன் கோயம்புத்தூர் வேலைக்கு செல்ல மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு இன்று சென்ற போது, தாமரைக்குளம் என்ற இடத்தில் பின்னோக்கி வந்த மர்ம நபர்கள் 3 பேர் யோகேந்திரனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த யோகேந்திரன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 19, 2025

திருவாரூர் மாவட்ட பிஜேபி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட பிஜேபி மண்டல் தலைவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூருக்கு கணேசன், திருத்துறைப்பூண்டி ஐயப்பன், முத்துப்பேட்டை முருகானந்தம், கோட்டூர் விக்னேஷ், கொரடாச்சேரி லோகநாயகி, மன்னை கிழக்கு சந்திரமோகன், மேற்கு செல்வம், குடவாசல் அசோகன், நீடாமங்கலம் வடக்கு பிரபாகரன், தெற்கு இலக்கியா, மன்னை நகருக்கு சேதுராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

News January 19, 2025

மது போதையில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து

image

மன்னார்குடி அருகே உள்ள பாமனியை சேர்ந்தவர் ராஜேஷ். அதே பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், இருவரும் பங்காளிகள். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மாலை ராஜேஷ் வீட்டு வாசலில் மது போதையில் நின்று கொண்டிருந்த பொழுது, மது போதையில் இருந்த அறிவழகன் தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியால் குத்தி மிரட்டியதாக அறிவழகன் மீது வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 19, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 30 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.19) மதியம் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 19, 2025

ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம்: திருவாரூர் எஸ்.பி அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.பி கருண் கரட் பேசுகையில், வாகன விபத்தை குறைக்க கட்டாயம் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றார் அவர்.

News January 19, 2025

இளம்பெண்ணிடம் அநாகரிகம்: போலீசார் வழக்குப்பதிவு

image

மன்னார்குடி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த இளம் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, அடையாளம் தெரியாத நபர் அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் செய்திகளை பதிவிட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், யார் என்று கேட்டால் பதிலுக்கு மேலும் அநாகரிகமாக பேசி வருவதாக புகார் அளித்துள்ளார்.  இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 18, 2025

மகன் இறந்து விட்டதாக தவறான பதிவு: தந்தை மீது தாக்குதல்

image

அகரதிருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் ஆதித்யா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை, அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் குமாரின் நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக மணிவண்ணன் கேட்டதற்கு, பிரேம்குமார் அவரை தகாத வார்த்தையால் திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!