India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) 1,124 டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் பிப்.3 முதல் <
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட மைய முடிவின்படி இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் செந்தில் வடிவை பணியிலிருந்து விடுவிக்க கோரி இரண்டு நாட்கள் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை யடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சங்க மாவட்ட தலைவர் என்.வசந்தன் தெரிவித்துள்ளார்.
சோழர்களின் தலைநகராக விளங்கிய திருவாரூருக்கு எண்ணில் அடங்க சிறப்புகள் உண்டு. அப்படிப்பட்ட திருவாரூரின் பெயர் காரணம் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? சங்க காலத்தில் ‘ஆரூர்’, அதாவது ஆத்தி மரங்கள் நிறைந்த ஊர் என அழைக்கப்பட்ட திருவாரூர், தேவார பதிகத்தில் பாடல்பெற்ற காரணத்தால் ‘திருஆரூர்’ என பெயர் பெற்றது. இது காலப்போக்கில் மருகி ‘திருவாரூர்’ ஆனது. இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்..
நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த முதியவர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பையை மிகச் சிரமத்துடன் தூக்கி சென்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர் பையை சோதனை செய்ததில் அவர் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஜோதிநாதன் எனும் முதியவரை போலீசார் கைது செய்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நபார்டு வங்கி சார்பில், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் காவிரி, டெல்டா பகுதியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஏற்படுத்துதல் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு முன்பதிவு செய்ய 7010155955 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE NOW !
ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு கழிவினம் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் வரும் பிப்.10-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல்துறையால் கழிவினம் செய்யப்பட்ட வாகனங்கள் திருவாரூர் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தெரிவித்துள்ளார். உங்களுக்கு தெரிந்த இந்த செய்தியை உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்!
இந்த ஆலயத்தில் காணப்படும் பிரம்மாண்ட குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனை ‘ஹரித்ராந்தி’ என்று அழைக்கிறார்கள். இதை தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய பெயர்களிலும் இக்குளம் அழைக்கப்படுகிறது. 11 நிலைகளை கொண்டு வித்தியாசமான அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் குறித்து அடுத்த பதிவில் காணலாம். SHARE!
முத்துப்பேட்டை சந்தை அருகே புது காளியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் மற்றும் காசுகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய முத்துப்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு பேட்டை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (26) என்பவரை கைது செய்து, ரூ.2,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வந்த மகாராஜா கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று, கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர் வெளியே வந்தார். தக்க சமயம் பார்த்து காத்திருந்த எதிர் தரப்பினர் சம்பவத்தன்று பள்ளிவாரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே தனியாக மது அருந்தி கொண்டிருந்த போது, மகாராஜாவை சரமாரியாக தாக்கி முகத்தை சிதைத்து படுகொலை செய்தனர். தொடரும்..
குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயமும் ‘தட்சிண துவாரகை’ (தெற்கு துவாரகா) என்று அழைக்கப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. இத்தல உற்சவர் சிலையானது சோழர் காலத்தைச் சேர்ந்த வெண்கல சிலையாகும். இக்கோயிலில் 1000 அடி நீளத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளம் குறித்து அடுத்த பதிவில் காணலாம். SHARE NOW!
Sorry, no posts matched your criteria.