Thiruvarur

News January 29, 2025

திருவாரூரை நடுங்க வைத்த கொலை வழக்கு பாகம் – 3

image

திருவாரூர் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வந்த மகாராஜா கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று, கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர் வெளியே வந்தார். தக்க சமயம் பார்த்து காத்திருந்த எதிர் தரப்பினர் சம்பவத்தன்று பள்ளிவாரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே தனியாக மது அருந்தி கொண்டிருந்த போது, மகாராஜாவை சரமாரியாக தாக்கி முகத்தை சிதைத்து படுகொலை செய்தனர். தொடரும்..

News January 29, 2025

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்: தல வரலாறு (பாகம் – 2)

image

குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயமும் ‘தட்சிண துவாரகை’ (தெற்கு துவாரகா) என்று அழைக்கப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. இத்தல உற்சவர் சிலையானது சோழர் காலத்தைச் சேர்ந்த வெண்கல சிலையாகும். இக்கோயிலில் 1000 அடி நீளத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளம் குறித்து அடுத்த பதிவில் காணலாம். SHARE NOW!

News January 28, 2025

திருவாரூரை நடுங்க வைத்த கொலை வழக்கு பாகம் – 2

image

திருவாரூர் அடுத்த பள்ளிவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவானந்தத்தின் இரண்டாவது மகன் தான் மகாராஜா. இவர் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டில், திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வந்தார் என கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் தான் அவர் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கி சிறை சென்றார். இந்த சமயத்தில் மகாராஜாவை பழிதீர்க்க எதிர் தரப்பினர் தகுந்த காலத்திற்காக காத்திருந்தனர். தொடரும்

News January 28, 2025

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்- தல வரலாறு

image

16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், 7 மண்டபங்கள் மற்றும் 9 புனித தீர்த்தங்கள் கொண்டு வைணவ தலங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த தலமாக, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில் விளங்குகிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உறையும் ராஜகோபால சுவாமி, கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மூலவர் மற்றும் உற்சவர் குறித்து அடுத்த பதிவில் காணலாம்.

News January 28, 2025

திருவாரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

2025 ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எதிர்வரும் 30.01.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

திருவாரூரை நடுங்க வைத்த கொலை வழக்கு பாகம் -1

image

திருவாரூர் அடுத்த பள்ளிவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மகாராஜா என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த 10 ஆவது நாளில் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தான் திருவாரூரை அதிர வைத்த மற்றொரு படுகொலை ஆகும். அந்த காலகட்டத்தில் இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. – தொடரும்

News January 27, 2025

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம்

image

வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ.6,500 மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார்.

News January 27, 2025

கொரடாச்சேரி: ஆற்றங்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

image

கொரடாச்சேரி அருகே வடபாதி கிராமத்தில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க அடையாள தெரியாத ஆண் சடலம் மிதந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கொரடாச்சேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 27, 2025

திருவாரூர்: 104 நிறுவனங்கள் மீது வழக்கு

image

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் நேற்று (ஜன.26) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு முறையாக விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்காத 60 கடைகள், 43 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் நிறுவனம் என மொத்தம் 104 நிறுவனங்கள் மீது அதிரடியாக வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News January 26, 2025

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர்

image

நாட்டின் 76 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உடனிருந்தார். 

error: Content is protected !!