India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்ட வருகின்றனர். 2வது நாளாக நேற்று நடைபெற்ற கைது நடவடிக்கையில் திருநெய்பேர், புதுக்குடி, குடவாசல் கோரையாறு, திருத்துறைப்பூண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை செய்த 16 பேரை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குடவாசல் அடுத்த பரவக்கரையை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மீது எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் ரவுடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் மீது கொலை, கொள்ளையை என 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் ஒரு பெண்ணிடம் கத்தியை காட்டி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக போலீசார் அவரை தேடி வந்தனர். இதனையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த ஐயப்பனை நன்னிலம் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் நகர காவல் நிலைய பகுதியில் சட்ட விரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மருதப்பட்டிணம் மகாதீர்முகம்மது(24), நெய்விளக்கு ராஜ்குமார் (24), புலிவலம் சத்தியசீலன் (18), திருவாருர் அருண்குமார் (26) ஆகியோரை கைது செய்த டவுன் போலீசார், அவர்களிடமிருந்து 2 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நாளை (செப்.23) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்கின்றனர். மேலும் விபரங்களுக்கு 04366-227411 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கஞ்சாவிற்கு எதிரான தீவிர சோதனை நடத்தினர். இதில் நேற்று 16 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 9½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுபோல் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரித்துள்ளார்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்ந்த பல தேவைகளை பயணிகள் நல சங்கம் திருச்சி கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம்
வலியுறுத்தியதின் பேரில், திருவாரூர் ரயில் நிலையத்தில் அனைத்து நடை மேடைகளிலும் மேல் கூரைகள் அமைக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் இருக்கைகளும் அமைக்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம், தேவங்குடி காவல் நிலைய பழைய மற்றும் சமீபத்திய வழக்கு கோப்புகளை தஞ்சை காவல் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் திருவாரூர் மாவட்ட அளவில் நீடாமங்கலம் காவல் நிலையம் மூன்றாம் இடம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தார். காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளார் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், போலீசார் உடனிருந்தனர்.
திருவாரூர் இரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் புதிய இருக்கை வசதி, நவீன கழிப்பிட வசதி பயனிகள் ஓய்வு அறை, புதிய நடைமேடை, கார் பார்க்கிங் வசதி மற்றும் ரயில் நிலையம் முன் அமைய உள்ள புதிய முகப்பு தோற்றத்தில் உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழி தேர் இடம் பெறுவது குறிப்பிடதக்கது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அரங்கில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாரம்பரிய நெல் வயல்களில் நுண்ணுயிர் பெருக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 8111080101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.