India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நன்னிலம் வட்டம் பேரளம் காவல் உதவி ஆய்வாளர் காந்தி கோவிந்தஞ்சேரி பகுதியில் இன்று வாகன சோதனை ஈடுபட்டிருந்தார். அப்போது காரைக்காலிருந்து ரகுமாத்திரன் என்பவர் ஒட்டி வந்த காரை மறித்து சோதனை செய்த பொழுது அதில் 92 பாண்டிச்சேரி மது பாட்டில்கள், 19 லிட்டர் பாண்டி சாராயம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரகுமாத்திரன் ராஜேந்திரன்,ராஜேஷ், பாண்டியன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று(மே 23) நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 21 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அந்தந்த போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருத்தி பயிர் 39,710 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக பருத்தி வயல்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. நீர் தேங்கி இருப்பதால் பருத்திப் பயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திட அதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி நீரை வடிய வைத்து பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சிமிலி பகுதியை சேர்ந்த ஜோதிவேல் என்பவருடைய மனைவி ஆனந்தவல்லி(64). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று(மே 23) மோகன் என்பவரது வயலில் கத்தரிக்காய் பறிக்கும்போது விஷமுள்ள பாம்பு கடித்து ஆனந்தவல்லி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைணவ கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் முன்பாக 16 கால் மண்டபம் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி கவனிப்பாரற்று இருந்தது. தற்போது பொறுப்பு ஏற்று உள்ள அறங்காவலர் குழு தலைவர் முயற்சியால் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு மின் இணைப்பு தரப்பட்டு விளக்கொளியில் மின்னுகிறது. பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு பாராட்டுகள் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா (22.05.2024 – 24.05.2024) வரை மூன்று நாட்கள் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி பலப்படுத்தபட்டது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக +2 தேர்வு மையம் துவங்கி +2 தேர்வில் 99 சதவீத தேர்ச்சியும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகில பாரத ஆன்மீக அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ மாதவ குருசாமி பாராட்டி பரிசுகளை இன்று வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்1 தேர்வு ஜூன் 13ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 27ஆம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழி தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா இன்று இரவு முதல் 3 தினங்கள் நடைபெற உள்ளது. இந்த தெப்ப திருவிழாவில் ஒரே நேரத்தில் 800 பேர் அளவிற்கு பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட தெப்பத்தில் 400 நபர்கள் வரை பொதுமக்கள் பயணிக்க காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.