Thiruvarur

News June 1, 2024

நாகை எம்பி செல்வராஜ் நினைவிடம் திறப்பு

image

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜீன் நினைவிடம் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று சித்தமல்லி அவரது இல்லத்தில் நடைபெற்றது.   நினைவிடத்தையும் படத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திறந்து வைத்து பேசினார். இதில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், காங் மாவட்ட தலைவர் துரைவேலன், அமமுக மாவட்ட செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்

News May 31, 2024

மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி தேதி அறிவிப்பு

image

மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட கருத்தாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இப்ப பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 3 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 தேதியும்,
4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024 தேதியில் நடைபெற உள்ளது.

News May 30, 2024

உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. அறிவுரை

image

நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச்.04ஆம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, பணிபுரிந்து வரும் 19 உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கினார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உடனிருந்தார்.

News May 30, 2024

திருவாரூர் மத்திய பல்கலை. வேலை வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்கள் அறிய <>https://cutn.ac.in/<<>> என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

News May 30, 2024

புதுமைப் பெண் திட்டம்: மாணவிகள் விண்ணப்பிக்கலாம்..

image

2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழிக்கல்வி பயின்று, 2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பு சேரும் அனைத்து மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற்று பயனடையலாம். இத்திட்டத்துக்கு தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு!

image

முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரியில் அசோகன் என்பவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருத்துறைப்பூண்டிக்கு உறவினர் வீட்டு நிச்சயதார்த்தற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டை உடைத்து வீட்டில் இருந்த யாரோ மர்ம நபர்கள் 2ஆயிரம் ரொக்கம், காமாட்சி விளக்கு, சந்தன பேலா, குங்கும சிமில் ஆகியவை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 30, 2024

ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

image

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திருச்சிறுகுடி கிராமத்தில் மங்களாம்பிகை சமேத சூட்சமபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கென்று தனி சன்னதி உள்ளது இக் கோயிலில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது மகன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News May 30, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் படத்திறப்பு விழா

image

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் சித்தமல்லி பகுதியில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி செல்வராஜ் அவர்களுடைய படதிறப்பு நாளை(மே.31) சித்தமல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உறவினர்கள் குடும்பத்தினர்கள் பங்கு பெற உள்ளனர்.

News May 29, 2024

தாலுகா வாரியாக கற்போர் எண்ணிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தாலுகா வாரியாக கற்போர் எண்ணிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வலங்கைமான்-582, குடவாசல்-784, கொரடாச்சேரி-610, நன்னிலம்-441, திருவாரூர்-491, மன்னார்குடி-832, நீடாமங்கலம்-701, கோட்டூர்-709, திருத்துறைப்பூண்டி -465, முத்துப்பேட்டை -592,
மொத்தம் – 6207 பேர் இத்திட்டத்தில் கற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

image

கூத்தாநல்லூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்அறிவித்த சட்ட கூலியை வழங்கிடகோரி நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மே 29, 30 தேதிகளில் கூத்தாநல்லூர் நகராட்சி ஒப்பந்தபணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது என்றும், மே 31 காலை10 மணிக்கு நகராட்சி அலுவலகம் எதிரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!