Thiruvarur

News April 4, 2024

திருவாரூர்:துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

image

மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி , மேலவாசல் ஆகிய பகுதியில் ஒடிஸா மாநிலத்திலிருந்து வந்துள்ள இந்திய துணை ராணுவப் படையினரின் 70 போ், தமிழக காவல்துறையினா் 30 போ் என 100 போ் பங்கேற்ற கொடி அணிவகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மன்னாா்குடி டிஎஸ்பி அ. அஸ்வத் ஆண்டோ தலைமை வகித்தாா்.

News April 4, 2024

அதிமுகவில் இணைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி

image

முத்துப்பேட்டை வட்டம் பின்னத்தூர் ஊராட்சியில் பின்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செங்குட்டுவன் கோவிலூர் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் 85 நபர்களுடன் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி அதிமுக திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News April 3, 2024

ஆறாம் தேதி உதயநிதி ஸ்டாலின் மன்னார்குடியில் பிரச்சாரம்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருமா கோட்டை பகுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் 6 ஆம் தேதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர், முரசொலியை ஆதரித்து மன்னார்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுகவினர் ஏராளமான கலந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 3, 2024

திருவாரூரில் ராணுவ அமைச்சர் பிரச்சாரம்

image

வரும் ஏப்ரல். 8ஆம் தேதி ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் நாகை மக்களவை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு திருவாரூக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில், திருவாரூரில் அதற்கான முன்னேற்பாடுகள் பாஜக சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில், ராஜ்நாத்சிங் உரை நிகழ்த்த உள்ள இடத்தினை பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் பணிக்குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

News April 3, 2024

வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து கிளை ஊராட்சிகளிலும் இன்று காலை அனைத்து கிராமங்கள் தோறும், மக்களை நேரில் சந்தித்து தான் போட்டியிடும் கதிர் அரிவாள் சின்னத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

News April 3, 2024

திருவாரூர்: தெப்ப உற்சவ தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி தேரோட்டம் திருவிழா கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில் வருகிற மே 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் கமலாலயம் குளத்தில் புகழ் பெற்ற தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது என ஆலய நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கலந்துகொள்ளுமாறும் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News April 3, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ். பி நேரில் ஆய்வு

image

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  நீடாமங்கலம், ஒளிமதி ஆகிய பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று (02.04.2024) இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நேரில் பார்வையிட்டார்.

News April 2, 2024

மூத்த காங்கிரஸ் தலைவர் மறைவு இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது

image

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் நீலன் அசோகன் தந்தையும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவரும் கல்வியாளருமான உ.நீலன் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இறுதி ஊர்வலம் நாளை 3ந்தேதி மாலை 5மணியளவில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மறைந்த உ.நீலன் உடலுக்கு காங்கிரசார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மக்கள் செலுத்தினர்

News April 2, 2024

திருவாரூர்: 100% வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரம்

image

திருவாரூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி எல்லோரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்.துண்டு பிரசுரங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

News April 2, 2024

அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு

image

திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவர்குடி மற்றும் வங்கநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. பலமுறை அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்கள் அறிவித்தும், அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கியும் ,எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

error: Content is protected !!