India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் இசுலாமிய வாக்காள பெருமக்களிடம் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ்க்கு கதிர் அரிவாள் சின்னத்தில் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி. கே. கலைவாணன் இன்று ஆதரவு திரட்டினார். நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மற்றும் தோழமை இயக்கத்தினர் பலர் உடனிருந்தனர்.
திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ரம்ஜானை முன்னிட்டு இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள். இந்நாள் போல் எந்நாளும் இஸ்லாம் பெருங்குடி மக்கள் செல்வ செழிப்போடு வாழ வேண்டும். மேலும், ஒவ்வொரு இஸ்லாமியர்களும் சாதி மத பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” குறிப்பிட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி, ராயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் ராயநல்லூர் கடை தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராயநல்லூர் செட்டிமுளை தென்பாதி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (26) விற்பனைக்காக 1,250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி 20-வது வார்டில் இன்று (10.4.2024) நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் திருத்துறைப்பூண்டி நகர கழக செயலாளர் டிஜி சண்முகசுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதில் அதிமுக நகர பொறுப்பாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
நீடாமங்கலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி முத்துகுமரன் தலைமையில், திருமக்கோட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீராசாமி, மன்னாா்குடி காவலா் பாலமுருகன் உள்ளிட்டோரை கொண்ட குழுவினா், அனுமந்தபுரம் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.1.26 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி நோன்பு பெருநாள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் சிறப்பு தொழுகை (பிறை தெரிந்தவுடன்) பொதக்குடி நூரியா தெருவில் நூருல்லா நினைவு விளையாட்டு மைதானத்தில் காலை 7.15 மணிக்கும், சவுக்கத்தலி தெருவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசலில் காலை 7 மணிக்கும், அப்துல்லா தெருவில் அமைந்துள்ள பாத்திமா பள்ளிவாசலில் காலை 6.45 மணிக்கும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். அந்த வகையில் நீடாமங்கலம் தாலுகா, எடக்கீழையூா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நேற்று வந்த அவர்கள் சாதிச் சான்றிதழ் வழங்காததால் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கார்த்திகா அவர்கள் நேற்று நாச்சிகுளம், பாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேலத்தொண்டியக்காடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கையான தடுப்பணை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.