Thiruvarur

News March 26, 2025

முத்துப்பேட்டை :போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு

image

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்த கிராம மக்கள் திரண்டு பேரணியாக வந்தபோது இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தடுத்து நிறுத்தி விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையனை தள்ளினார். இதனைக்கண்ட மக்கள் கூச்சலிட்டனர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

News March 25, 2025

வலங்கைமான்: டூவீலர் மரத்தில் மோதி 2 பேர் பலி

image

வலங்கைமான் அருகே மணலூரை சேர்ந்த சங்கர்(55), சோத்தமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தம் (44) ஆகியோர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இருவரும் வலங்கைமான் ஊத்துக்காடு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு செல்லும் போது சாலையோர மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 25, 2025

திருவாரூர் கலெக்டர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் நிதி உதவி பெற்று வரும் விவசாயிகள் தங்களது நில உடமை பதிவுகளை வரும் மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.அதுபோல இதுவரை பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது விபரங்களை சரிபார்த்து பதிவு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News March 25, 2025

திருவாரூர் மாணவர்களுக்கு நற்செய்தி

image

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.

News March 25, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூரில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 27ஆம் தேதி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். SHARE பண்ணுங்க..

News March 25, 2025

திருவாரூர் திருத்துறைப்பூண்டி மின்சார ரயில் சோதனை ஓட்டம்

image

வரும் 26/03/2025 (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதிதாக மின்மயமாக்கப்பட்ட திருவாரூர் சந்திப்பு – திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி பாதையில் அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. முதன்மை வணிக மின் பொறியாளர் அவர்கள் தலைமையில் திருச்சி கோட்ட மேலாளர் அவர்களும் இணைந்து ஆய்வு செய்ய உள்ளார்கள் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 25, 2025

திருவாரூர் மாவட்டம் தேமுதிக மாநில நிர்வாகி அறிவிப்பு

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த இரா ஜெயபால் அவர்கள் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில் மார்ச் 24 இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இரா.ஜெயபால்-ஐ மாநில தொழிற்சங்க துணைத் தலைவராக நியமனம் செய்துள்ளார்.

News March 25, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு மையம் சம்பந்தமான கூட்டம்

image

இன்று மூன்று மணி அளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துக் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தூரத்தில் உள்ள வாக்கு சாவடிகள் மாற்ற வேண்டும் பழுது அடைந்த வாகுசாவடி மையம் சரிசெய்ய வேண்டும் போன்ற கருத்துகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

News March 24, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 24, திங்கள்கிழமை) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும்.

News March 24, 2025

திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் மும்முரம்

image

புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!