India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து பேரூராட்சி சார்பில் 18 பேரூராட்சியிலிருந்து வந்த செயல் அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் இன்று 18 வார்டுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் இதில் 33க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டிருந்த 32 சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி 15 வது வார்டு கனகசபை பிள்ளை தெருவில் 200 மீ நீளம் தார் சாலை போடும் பணி இன்று தொடங்கியது. இந்நிலையில் 100 மீ மட்டுமே சாலை அமைக்கப்படும் என தகவல் வெளியானதால் தெருவாசிகள் சாலை அமைக்கும் இயந்திரங்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் 200 மீட்டர் தார் சாலை அமைக்கப்படும் என உறுதியாக தெரிவித்த பின் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.
மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் உள்ள கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்து அலுவலகத்தில் தொ.மு.ச.சாா்பில் நேற்று நடைபெற்ற தொழிலாளா் தின நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்துகொண்டார். அப்போது, “திமுக ஆட்சியில் தொழில் மூதலீடு மூலம் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுப்பாலத்தை அகற்றி அகலமான கான்கிரீட் பாலம் கட்ட தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பழைய குறுகிய கம்பி பாலம் உடைத்தெடுக்கும் பணி முடிவுற்றது. தற்போது புதிய அகலமான பாலம் கட்டும் பணி விவரங்களை தொழில் துறை அமைச்சர் ராஜா இன்று நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். நகரமன்ற தலைவர் சோழராஜன் நகரசெயலாளர் வீரா கணேசன் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர் பகுதியில் 138 வது மே தின பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது இந்நிகழ்வில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம் செல்வராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு மே தின பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர் இந்நிகழ்வில் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
மன்னார்குடியில் கோபாலசமுத்திரம் வடக்கு வீதியில் வசிக்கும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை வருகை தந்தார். காமராஜ் அவரை வரவேற்று உபசரித்தார். நிகழ்வில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் மற்றும் கழக நிர்வாகிகள் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென ஆட்சியர் சாருஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். முறையற்ற குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் குழாய்களில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் பொதுமக்களின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
முத்துப்பேட்டை ஒன்றியம் கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ளஸ்ரீ நல்லமாணிக்கர்
சாமிகள்மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதில் இரண்டாயித்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா மறவக்காடு ஊராட்சி சித்தேரி கிராமத்தில் உள்ள திமுக கிளை நிர்வாகிகளின் வீட்டிற்கு நேற்று தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா நேரில் சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் நிகழ்ச்சியில் மன்னார்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சித்தேரி சிவா உள்பட திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாலட்டம் கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பொதக்குடி சேகரை காந்திகாலனி மிளகுகுளம் பூதமங்கலம் தண்ணீர்குன்னம் லெட்சுமாங்குடி வடகோவனூர் உள்பட பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேற்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் கோடை வெயிலில் வாடும் பொதுமக்கள் இந்த மின்வெட்டுக்கு ஓட்டு போட்டோம் என புலம்பி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.