India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் வரை செல்லும் பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலம் வழி செல்லும் அனைத்து ரயில்களும் நீடாமங்கலத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால் இந்த ரயில் மட்டுமே நிற்பதில்லை. ஆனால் சர்வீஸ்-க்காக திருச்சி செல்லும் போது இரு வழியிலும் இன்ஜின் மாற்றுவதற்கு அரைமணி நேரம் நீடாமங்கலத்தில் நிற்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா கமலாலயம் தெப்ப குளத்தில் வரும் 22.05.24 (புதன்கிழமை) 23.05.24 (வியாழக்கிழமை) 24.05.24 (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு. முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் அழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமலாபுரம் அரசு மதுபான கடை அருகில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தபாண்டியன் நகரை சேர்ந்த அமர்நாத்(45) என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்கில் மணல் திருடிய கூத்தாநல்லூரை சேர்ந்த முரளிதாஸ், சரண்ராஜ், செங்குட்டுவன், தினேஷ் குமார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூரிலுள்ள தியாகராஜ கோயில், சைவ மரபில் பெரிய கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்று அழைக்கப்படுகிறது. நாயன்மார்களால் பாடல் பாடப்பெற்ற இத்தலத்தில், உலகின் மிகப் பெரித் தேரான ஆழித்தேர் கொண்ட கோயிலாகும். இக்கோயிலில் பசுவிற்கு நீதி வழங்கினான் மனுநீதிச்சோழன். பழமையான புராணங்களை கொண்ட இத்தலம் 2000-3000 வருடங்களுக்கு முந்தையது. 9 ராஜகோபுரமும், 80 விமானமும், 12 மதிகள் கொண்ட கம்பீரமான தோற்றமுடையது.
மன்னார்குடியில் நேற்று வெளியான +2 அரசு பொதுத்தேர்வில் தேசிய மேல்நிலைப்பள்ளி 90.4 சதவீதம் தேர்ச்சியும், தூய வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி 97 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்
எஸ். பி. ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
திருவாரூர் மாவட்டம் பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 9ஆம் வகுப்பு தேர்வு எழுதாத அல்லது நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவ மாணவியர்களை இல்லம் தேடி சென்று ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், காவல்துறை,
வட்டார கல்வி மைய ஆசிரியர், பயிற்றுநர் வட்டார வளமைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 67.5 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 68பேர் தேர்வு எழுதி இருந்தநிலையில் 46மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் அப்துல் ரஹ்மான் (509) முதலிடமும், மாணவர் ஹரிஹரன் (508) இரண்டாமிடமும், மாணவர் கண்ணன் (475) மூன்றாமிடமும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் பாராட்டினார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடக மாநிலத்தை சார்ந்த பாலியல் குற்றவாளி பாராளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி டாக்டர் நிரோஷா மனு கொடுத்தார். அப்பொழுது மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வே.வீரமணி நன்னிலம் வட்டார தலைவர் வெங்கடேசன் மாநில எஸ்சி துறை மாநில செயலாளர் கிஷோர், நகர காங்கிரஸ் பொதுச்செயலாளர் பவன் குருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.