Thiruvarur

News January 15, 2026

திருவாரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News January 15, 2026

திருவாரூர்: மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

image

கள்ளிக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் 65 மதிக்கதக்க மூதாட்டி மயங்கி கிடப்பதாக எடையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மூதாட்டியை மீட்டு, திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 15, 2026

திருவாரூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News January 15, 2026

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா- ஆட்சியர்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா வரும் ஜன.22-ம் தேதி முதல் பிப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். அதில் ஒன்றியத்திற்கான பரிசுத் தொகையாக முறையே முதல் 3 இடங்களுக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 மற்றும் மாவட்டத்திற்கு ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

News January 15, 2026

திருவாரூர்: தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், காக்காகோட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரை விமானம் ஒன்று தாழ்வாக பறந்தது. இவ்விமானம் பல்வேறு கிரங்களில் மிகவும் தாழ்வாக பலத்த சத்தத்துடன் தென்னை மரங்களை தொட்டும் செல்லும் அளவிற்கு பறந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது. பின்னர், அது பயிற்சி விமானம் என தெரிய வந்தது.

News January 15, 2026

திருவாரூர்: அம்மன் நகையை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

image

கோட்டச்சேரியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட 2.3/4 சவரன் நகையை 6 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மர்ம நபர்கள் கரூரில் பதுங்கிருப்பதாக தகவல் கிடைத்தன்பேரில், அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த வேதவன்(40), பாலசுப்ரமணியன்(19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

News January 15, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026

திருவாரூர்: தோஷங்கள் நிவர்த்தியாக இந்த கோவில் போங்க

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பாமணி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான நாகநாதர் மற்றும் சர்ப்ப புரீஸ்வரர் வழிபட்டால் நாகதீஷம், ராகு கேது தோஷம், மற்றும் கால சர்ப்ப தோஷம் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!