Thiruvarur

News May 14, 2024

திருவாரூர்: 150 அடி நீள நிழல் வலை அமைப்பு

image

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் உள்ள ஆலங்குடி பகுதியில் உள்ள பேருந்து நிலைய பகுதிகளில் கடும் வெயிலால் பொதுமக்கள் மற்றும் ஆலங்குடி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாலையோர வியாபாரிகள் நலன் கருதி ஆலங்குடி வர்த்தக சங்கத்தினர் சார்பில் 150 அடி நீள நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

News May 14, 2024

முத்துப்பேட்டை அருகே ரயிலில் சிக்கி மாடு பலி

image

முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை கீழக்காடு இரயில்வே பாலம் அருகே நேற்று காலை ரயில்வே தண்டவாளத்தை மாடு ஒன்று கடந்து சென்றபோது அப்போது திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற ரயில் மோதி ரயிலின் நடுவில் சிக்கிக்கொண்டது. உடனே ரயிலை நிறுத்திய ஓட்டுனர்கள் இறங்கி சிக்கிய மாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பின்னர் ரயிலை எடுத்து சென்றனர். இதனால் ரயில் 5 நிமிடம் நிறுத்தப்பட்ட பின்னர் புறப்பட்டு சென்றது.

News May 13, 2024

திருவாரூர் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

திருவாரூர் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

நாகை எம்பி எம்.செல்வராஜ் காலமானார்

image

இந்திய கம்யூ. கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ்(67) இன்று (13.05.24) அதிகாலை காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை(14. 05. 24) அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News May 13, 2024

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

image

உள்ளிக்கோட்டை சின்ன அரச மர மருது நண்பர்கள் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டி முடிவுற்று நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பத்ம பிரகாஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். கீழ்க்கண்ட அணிகள் பரிசு பெற்றன முதல் பரிசை நெய்வாசல் டென்ஷன் பாய்ஸ் தட்டி சென்றனர்.

News May 12, 2024

நாய் பிடிக்க நூறு ரூபாய் வசூல்..!

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பரவாக்கோட்டை கிராமத்தில் வெறி நாய்கள் பகல் மற்றும் இரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆடு மாடு மற்றும் கோழிகளை கடித்து குதறி வருகின்றன. இதனால் நாயை பிடிக்க ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் ரூ.100 வசூல் செய்யப்பட்டதாகவும் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என இப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

News May 12, 2024

மூத்த குடிமக்கள் இயக்கத்தின் மாதாந்திர கூட்டம்

image

முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் நேற்று தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இராசாராம் , சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் செல்லப்பா, வில்வம், பன்னீர்செல்வம், சொக்கலிங்கம், மதியழகன், பாலசுப்பிரமணியன், கோவி. ரெங்கசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர் இதில் பிறந்த நாள் கண்ட ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

News May 11, 2024

திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் அதிரடி கைது

image

பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குடவாசல் அருகே காவனூரைச் சேர்ந்த மதுசூதனனை கடந்த மே 8-ம் தேதி இரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதையடுத்து பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 11, 2024

திருவாரூர் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

error: Content is protected !!