India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குடவாசல் அருகே காவனூரைச் சேர்ந்த மதுசூதனனை கடந்த மே 8-ம் தேதி இரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதையடுத்து பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 17 ஆம் தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் வகையிலும் மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சனி மற்றும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் வகையில் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.
எட்டு முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு திருவாரூர் வழியாக இயக்கப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் :திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முடக்கியதை கண்டித்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணிக்கப்படுவது கண்டித்தும் வரும் 21.05.24 (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா குடவாசல் அருகே உள்ள காவனூரில் முள்ளால் மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் வெட்டப்பட்ட சம்பவத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் ச.பாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் குடவாசல் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆலத்தம்பாடி பள்ளியில் சர்மிளாதேவி 500 மதிப்பெண்களும் 436 எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். வினித் 432 இரண்டாம் இடமும் மூன்றாமிடம் ரபீனா 426 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் கூறினர்.
மன்னார்குடி தூய வளனார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் எம். பிரியசரண் 497 மதிப்பெண்கள் பெற்று திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் இப்பள்ளி மாணவி ஜி. கிறிஸ்டினா 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், காவ்யா 490 பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 8 பேரும் அறிவியலில் 2 பேரும் சமூக அறிவியலில் 2 பேரும் சென்டம் எடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.