India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். பருவம் தவறி பெய்யும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரன வழங்கவும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடும் வழங்கவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 25ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்ட தமுமுக மகளிர் பேரவை சார்பில் 13 வயது முதல் 20வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு வரும் மே 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் திருவாரூர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். இதில் சுய ஒழுக்கம் மன உறுதி கல்வி வழிகாட்டல் ஆளுமைத் திறன் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒரு தரப்பு விசிகவினர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி ஆர்ப்பாட்டமும், மற்றொரு தரப்பினர் போலீசாரை கண்டித்து காவல்நிலைய முற்றுகை போராட்டம் என அறிவித்தால் ஏடிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி, டிஎஸ்பிக்கள் ராஜா , சோமசுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை, கடத்தலில் ஈடுப்பட்ட திருவாரூர், நல்லப்பா நகரை சேர்ந்த மகேந்திரன், நீடாமங்கலம் அனுமந்தபுரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோயல் நீடாமங்கலம், பரப்பனமேட்டை சேர்ந்த முனியப்பன் ஆகிய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா 150 கிலோ மற்றும் நான்கு சக்கர வாகனம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டது.
3 நாட்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் உட்கோட்டங்களில் நடைபெற்று வருகிறது. திருவாரூர் உட்கோட்டத்தில் காவலர்களுக்கு நடத்தப்பட்டு வரும் சட்ட பயிற்சி வகுப்பு (2nd Batch) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் பார்வையிட்டு சட்ட வகுப்புகள் குறித்து கேள்விகள் கேட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து சட்ட வகுப்புகள் குறித்து நிறை, குறைகளை கேட்டறிந்தார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு சேர்வதற்கு இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 24.05.24(வெள்ளிகிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கோபு, நிர்வாகிகள் ராஜகோபால்,கணேசன்,ஜீவா, ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் அரசு ஊழியர்கள் போல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 ஆக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
திருவாரூர் நெய்விளக்கு தோப்பு தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்திவருபவர் மணிமாறன்(33). இவர் நேற்று நள்ளிரவு அவரது வீடு அருகாமையில் உள்ள ஓடம்போக்கி ஆற்றுபாலம் அருகே இயற்க்கை உபாதைகளை கழிக்க சென்றபோது ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த மின்கம்பியை தவறுதலாக தொட்டுள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருவாரூர் மாவட்ட பள்ளி வாகனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் பணி இன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.பி. ஜெயக்குமார், கோட்டாட்சியர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.