Thiruvarur

News January 22, 2026

திருவாரூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW!

News January 22, 2026

திருவாரூர்: ரேஷன் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு புதூர், சன்னாநல்லூர், தேதியூர், செம்மங்குடி, குமரபுரம், கச்சனம், செட்டிச்சத்திரம், வேளுக்குடி, வடசங்கேந்தி ஆகிய இடங்களில் நடைபெறும்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

திருவாரூர்: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே ATM-ல் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

திருவாரூர்: வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டமானது, மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 22, 2026

திருவாரூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

திருவாரூர்: சாலையில் சென்ற தம்பதியர் மீது தாக்குதல்!

image

காவனூரைச் சேர்ந்தவர் முருகையன் (43)-மேகலா (39) தம்பதி. அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (28). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகையனும், மேகலாவும் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஆனந்தராஜ், தம்பதியரை கத்தியை காட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் மேகலா அளித்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News January 22, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!