Thiruvarur

News October 24, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 37 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி

image

திருவாரூரில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. 36,960 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இலக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு முன்னோடி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

News October 24, 2024

திருவாரூரில் மத்திய அமைச்சர்

image

திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ‘ரிசர்ச் ப்ராஸ்பெக்டஸ் இன் ஸ்கூல் சைக்காலஜி’ என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதனை மத்திய ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் தொடங்கி வைப்பதற்காக இன்று அதிகாலை திருவாரூர் வந்தடைந்தார். அவரை பாஜகவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

News October 23, 2024

திருவாரூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று (23.10.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை காவல்துறையினருக்கு தெரிவித்தார்.

News October 23, 2024

நாளை திருவாரூர் வரும் மத்திய அமைச்சர்

image

திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘ரிசர்ச் ப்ராஸ்பெக்டஸ் இன் ஸ்கூல் சைக்காலஜி’ என்ற தலைப்பில் அக்.24-26 ஆம் தேதி வரை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நாளை (அக்.24) தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

News October 23, 2024

திருவாரூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

image

திருவாரூரில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வடுவூர். இங்கு தான் உலக புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் 38 வகைகளை சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து பறவைகள் வடுவூருக்கு இடம் பெயர்கின்றன. திருவாரூர் மாவட்டத்தில் குடும்பத்தோட சுற்றுலா செல்ல இது ஒரு அருமையான இடம். ஷேர் செய்யவும்

News October 23, 2024

பிரான்ஸ் செல்லும் திருவாரூர் மாவட்ட கனவு ஆசிரியர்

image

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது பெற்ற 54 ஆசிரியர்களை 6 நாள் கல்வி சுற்றுப்பயணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார். அதில் தேர்வான திருவாரூர் தியானபுரம் அரசு பள்ளி ஆசிரியர் மு.அன்பழகனை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.

News October 23, 2024

அரசு ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், பயிற்சியாளர்கள் சேர்க்கை 2024 கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர் தங்களது சான்றிதழ்களுடன் 18.10.2024 முதல் 30.10.2024 ஆம் தேதி வரை விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 23, 2024

திருவாரூர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் புதிய அடையாள அட்டை பெற, ஆதார் அட்டை மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனை பெயர் குறிப்பிட்டு www.swavlambancard.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பின்னர் முகாம் நடைபெறும் தேதி தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். ஷேர் செய்யவும்

News October 23, 2024

திருத்துறைப்பூண்டி – திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை

image

திருவாரூர் சந்திப்பு – திருத்துறைப்பூண்டி சந்திப்பு – காரைக்குடி சந்திப்பு ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் சேவைகள் இன்று திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி மார்க்கம் வண்டி எண் 20683 தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிகாலை 2.00 மணி, திருத்துறைப்பூண்டி – அதிகாலை 2.29 மணி, முத்துப்பேட்டை – 2.54 மணி, பட்டுக்கோட்டை – 3.23 மணி சேர்கிறது. ஷேர் செய்யவும்

News October 22, 2024

பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவு ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்கு கூடும் இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. எந்தவித இடையூறும் இன்றி பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைவீதிகளில் அதிகமாக கூட்டம் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கவனமாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.