Thiruvarur

News August 24, 2024

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள்

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் எண்ணிக்கை, அவற்றை பாதுகாப்பது, குறித்த நேரத்தில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று கரைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

News August 24, 2024

திருவாரூரில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எம்.எல்.ஏ

image

திருவாரூரில் இன்று (24-08-2024) முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திமுக மாவட்ட இளைஞரணி சார்பாக நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி. கே. கலைவாணன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பனங்குடி எஸ்.குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 24, 2024

திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ள இப்போட்டிகளில் பங்குபெற http://sdat.in/cmtrophy/player-login/ என்ற இணைய முகவரியில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 24, 2024

திருவாரூரில் 500 மாணவர்களுக்கு ஏடிஎம்

image

திருவாரூர் மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரி . மத்திய பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, ஐடிஐ, மருத்துவம், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 4,054 விண்ணப்பங்களில் 500 மாணவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஏடிஎம் கார்டு மற்றும் உயர்கல்வி வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

திருவாரூர் அருகே 34,000 மாணவர்களுக்கு மாத்திரை

image

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 102 அங்கன்வாடி, 105 பள்ளிகளில் உள்ள 19 வயது நிரம்பிய சுமார் 34,000 மாணவ, மாணவிகளுக்கு சுகாதார துறை சார்பில் நேற்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பூச்சி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் தலைமையில் சுகாதார துறையினர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News August 24, 2024

மாவட்ட அளவில் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இனிது கல்வி அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சித் தலைவரால் கையெழுத்திடப்பட்டது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து குழந்தைகளுக்கான தற்போதைய கல்வி தர திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்ப்பதற்கும், மேம்பாட்டு திட்டங்களை வடிவமைக்கவும் இந்த அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

News August 23, 2024

திருவாரூரில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

திருவாரூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

News August 23, 2024

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நடமாடும் மருத்துவமனை

image

திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக ஐந்து நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.

News August 23, 2024

18 இடங்களில் மின் விளக்குகள்

image

திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாருர் புதிய பேருந்து நிலையத்தில் 2 ஒளிரும் மின் விளக்குகள் உள்ளிட்ட விபத்துக்கள் நடைபெறும் பல்வேறு சாலைகளில் மொத்தம் 18 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.

News August 23, 2024

திருவாரூரில் 601 இடங்களில் வழிபாடு

image

திருவாரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து நேற்று மாலை மனு அளித்தனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 601 இடங்களில் விநாயகர் வைத்து வழிபட உள்ளதாகவும் செப்டம்பர் 7 முதல் 15ஆம் தேதிக்குள் 13 இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் பட்டியலிட்டு வழங்கினர்.

error: Content is protected !!