India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாங்கண்ணித் திருவிழாவை முன்னிட்டு நாளை 28-ஆம் தேதி விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து 28ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இதே போல வேளாங்கண்ணியில் இருந்து வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும்.
மன்னார்குடி சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது மதுக்கூர் சாலையில் ஆன் லைன் லாட்டரி சீட் விற்பனை செய்த ஆண்ணாமலை நாதர் செட்டி தெருவை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் ஆன் லைன் லாட்டரி சீட் விற்பனை செய்ததால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
முத்துப்பேட்டை தாலுக்கா களப்பால் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடந்த 9ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன் என்பவரை இன்று போலீசார் ஆலங்காடு ரயில்வே மேம்பாலம் அருகே வைத்து பிடித்தபோது தப்பியோடினார். இதில் விழுந்ததில் கை கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மாதவன் மன்னார்குடி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோட்டூர் அருகே ஓவர்ச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ராகவி. இவர், சிறுவயதில் இருந்தே பல்வேறு ஓவியங்கள் வரைவதில் தனித்திறமை பெற்றவர். இன்று நாடெங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் நிலையில், தன் ஓவியத்திறமையை மிக பக்தியுடன் மங்கல பூஜை காரியங்களில் பயன்படுத்தும் வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் மிகவும் பிரபலமான தீபம் சுவீட் உரிமையாளர் மோகன் மகன் அருள். நேற்று இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் அருள் என்பவர் படுகாயமடைந்தார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுமார் 30க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்பட்டது. தொடர் மின்வெட்டால் பொதுமக்கள், தாய்மார்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்தனர். இதனால், வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் பழுதானது. இந்த தொடர்மின்வெட்டை சீர் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த (04.03.2024)-ம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, செய்முறை பயிற்சியிலுள்ள 18-உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (25.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள ‘சிக்காகோ – அமெரிக்க தமிழர்களுடனான சந்திப்பு’ நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்சரும், மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமான TRB ராஜா தலைமையில் சிக்காகோவில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் அசோசியேசன் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அர்பன் பேங்க் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட வலுத்தூக்கம் சங்கம் இணைந்து நடத்துகிறது. இதில் இளைஞர்கள் தங்களது உடற்கட்டு திறனை வெளிப்படுத்தி ஆணழகன் போட்டியில் போட்டியிடுகின்றனர்.
திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.