India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத இயல்பான மழை அளவு 9.3 செ.மீ. ஆக உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகள் குருவை சாகுபடி துவங்கி உள்ள நிலையில் நேற்று முதல் அதிக வெயில் இல்லாத வானிலை காணப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 4550 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12850 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு இம்மாவட்டத்தில் 13,107 விவசாயிகள் 20,211 ஹெக்டேர் பரப்பிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ இத்தகவலை தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
விஜயபுரம் வர்த்தக சங்கம் மற்றும் திருவாரூர் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்தும் தொழில்முனைவோருக்கான தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை 30/8/2024 காலை 11.30 மணிக்கு பைபாஸ் ரோடு மினி ஹாலில் நடைபெற உள்ளது. பல்வேறு முக்கிய வங்கிகள் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. மேலும் தொழில் விரிவாக்கத்திற்கும் இம்முகாமில் கடன் பெறலாம் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று (ஆகஸ்ட்.28) டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்டிரபதி பவனில்) சந்தித்தார்.
திருவாரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாபெரும் தொழில்கடன் வழங்கும் முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கலைவாணர் அரங்கத்தில் வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள மாற்று திறனாளிகள் ஆக.30ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களது சுயவிபரம் அடங்கிய குறிப்புகளை (Resume) 5-க்கு குறையாமல் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாபெரும் தொழில்கடன் வழங்கும் முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று நடத்தப்படும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். புகார்கள் தொடர்பாக 29 நபர்கள் மனுக்களை வழங்கினர். அவற்றை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க எஸ் பி உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரின் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒசூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு வேலை வாய்ப்பு முகாம், வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1500 பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்ட 12ஆம் மற்றும் ஐடிஐ முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.