India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இனிது கல்வி அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சித் தலைவரால் கையெழுத்திடப்பட்டது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து குழந்தைகளுக்கான தற்போதைய கல்வி தர திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்ப்பதற்கும், மேம்பாட்டு திட்டங்களை வடிவமைக்கவும் இந்த அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
திருவாரூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக ஐந்து நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.
திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாருர் புதிய பேருந்து நிலையத்தில் 2 ஒளிரும் மின் விளக்குகள் உள்ளிட்ட விபத்துக்கள் நடைபெறும் பல்வேறு சாலைகளில் மொத்தம் 18 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து நேற்று மாலை மனு அளித்தனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 601 இடங்களில் விநாயகர் வைத்து வழிபட உள்ளதாகவும் செப்டம்பர் 7 முதல் 15ஆம் தேதிக்குள் 13 இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் பட்டியலிட்டு வழங்கினர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (22.08.2024) இரவு மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்
மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்
திருவாரூரில் வரும் செப்டம்பர் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் த.மு.எ.க.ச சார்பாக ‘8 ஆவது சர்வதேச திரைப்பட விழா’ நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும், அதில் கலந்து கொள்ளும் முக்கிய திரைப்பட எழுத்தாளர்கள், கலைஞர்களை வரவேற்பது குறித்தும் திருவாரூரில் நடைபெற்ற த.மு.எ.க.ச ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
தமிழகத்தின் கோவை, தேனீ, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று முதல் கூத்தாநல்லூரில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று காலை கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு கூடியிருந்த தூய்மை பணியாளர்களிடம் அவர்களது பணிச்சூழல் குறித்து கலந்துரையாடினார்.
கும்பகோணம் முழையூரை சேர்ந்தவர் இளையராஜா(30). இவர் நேற்று திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கி பைக்கில் கொரடாச்சேரி அடுத்த கமுகக்குடி கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த கோவில்வெண்ணி தனியார் பொறியியல் கல்லுாரி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே இளையராஜா உயிரிழந்தார். தகவல் அறிந்த கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக உடலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.