India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஆந்திரா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள், வீராங்கணைகள் கூட்டம் பட்டாபிராமில் K.K.R. மஹால் நாளை காலை நடக்கிறது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிற அணி மாவட்ட செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், நகர கழக செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருவள்ளூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தணி அடுத்த கேசவராஜகுப்பத்தைச் சேர்ந்த நபர், பாண்ட்ரவேட்டில் வசிக்கும் சமூகத்தினரை தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்டுடிருந்தனர். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் வீடியோ பதிவிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபோன்று இருசமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்ப்படுத்தும் விதத்தில் வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
3ஆவது நாளாக ரயில் டிக்கெட் UTS செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் திருவள்ளூரில் உள்ள ரயில்கள் மூலம் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தினசரி, சீசன் டிக்கெட் எடுத்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், 3ஆவது நாளாக இன்றும் ரயில் டிக்கெட் எடுக்கும் UTS செயலி முடங்கியுள்ளதால் டிக்கெட் பெற முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அக்.14 தேதி கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கு பரவலாக மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அக்.14 தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் பொது விநியோக திட்ட குறைதீர்க்க முகாம் நடைபெறுகிறது இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் வருகின்ற 19ஆம் தேதி சனிக்கிழமை அந்த. அந்த வட்ட அலுவலகங்களில் நடக்கிறது என தகவல்
காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல சுழற்சி என பல காரணங்களால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 109 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து www.drbtvl.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7.00 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
Sorry, no posts matched your criteria.