India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருத்தணி அடுத்த சந்தான கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ், திருத்தணியில் உள்ள வங்கியில் கடன் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர்கையில் வைத்து இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து ரூ.92 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்துள்ளனர். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (20.01.2025) மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் 354 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூண்டியில் 56 மி.மீ, திருத்தணியில் 40மி.மீ, ஆர்.கே.பேட்டையில் 39 மி.மீ, தாமரைபக்கம் 36மி.மீ, திருவள்ளூரில் 32 மி.மீ, பள்ளிப்பட்டில் 30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணலை பதிவு இல்லாத டிராக்டருடன் கூடிய ட்ரெய்லரில் சட்ட விரோதமாக ஏற்றி வந்த இரு நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மணலுடன் கூடிய வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது பாதிரிவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் பிரகலநாதன்(50) இவரது மனைவி முருவம்மாள்(45), இவர்களுக்கு இருவரும் பைக்கில் சின்ன போரூர் சென்று கொண்டிருந்தனர். திருமழிசை கூட்டு சாலை அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் முருவம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கடம்பத்தூர் கசவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் திவாகரன் (41). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த திவாகரன் தன் அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.