Thiruvallur

News June 1, 2024

திருவள்ளூர்: 100% மாணவர்கள் சேர்க்கை

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான திறன் குழுக் கூட்டம் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் கூறியது, மாவட்டத்தில் அரசு பயிற்சி மையங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது என்றார்.

News June 1, 2024

திருவள்ளூர்: போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி

image

அம்பத்தூர் அருகே புத்தகரம் பகுதியில் அருணா (63) என்பவருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான 1800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை புத்தகரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இனியன் (34) என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இனியன் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News May 31, 2024

திருவள்ளூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை!

image

திருவள்ளூர் அருகே மணவாள நகர், எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர்கள் சதீஷ்(28), முரளி(23). இந்த நிலையில் நேற்று(மே 30) இரவு இவர்கள் இருவரையும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முரளி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். புகாரின் பேரில் மணவாள நகர் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

News May 30, 2024

பிரபல நடிகருக்கு திருத்தணி முருகன் கோவில் திருமணம்

image

ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை சமூக வலைதளத்தில் தனது திருமண அழைப்பிதழை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார். இந்த திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ள திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

News May 30, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மே 30 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 30, 2024

மனைவியை கொலை செய்த கணவர் கைது

image

எண்ணூர், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (30). இவரது மனைவி ராஜலெட்சுமி (25). நேற்று தம்பதிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் ராஜலட்சுமியை குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை இன்று கைது செய்தனர்.

News May 30, 2024

ஆவடி: புதிய எல்.இ.டி மின் விளக்குகள் அமைப்பு

image

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 41-வது வார்டில் பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றிவிட்டு, புதிய மின் விளக்குகள் அமைக்க கோரி கவுன்சிலர் சாந்தி பாண்டியன் மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று புதிய எல்.இ.டி மின் விளக்குகள் மாற்றும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக கவுன்சிலர் சாந்தி பாண்டியனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News May 30, 2024

சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 30, 2024

திருவள்ளூர்: போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

image

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தயாளன், மோனிஷ் குமார் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த யுவராஜ், மோகன் ஆகிய 4 பேரும் மும்பையிலிருந்து ரயில் மூலம் போதை மாத்திரை கடத்தி வந்தனர். திருத்தணியில் இறங்கி சென்னைக்கு பேருந்து மூலம் கடத்த காத்திருந்தனர். அப்போது அங்கே சென்ற போலீசார் அவர்களைப் பிடித்து சோதனையிட்டதில் அவர்களிடம் போதை மாத்திரை இருப்பதை கண்டுபிடித்து 4 பேரையும் கைதுசெய்தனர்.

News May 29, 2024

திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயில் சிறப்பு!

image

திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ சுவாமி கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஐந்தடுக்கு ராஜ கோபுரமுடைய இத்தலத்தில் 9 ஆம் நூற்றாண்டின் பல்லவ வம்சத்தைச் சேந்த கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் வைத்திய வீரராகவ கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலினுள் சிறுசிறு சன்னதிகள் பல உள்ளன. இக்கோயிலின் விமானம் விஜயகோடி விமானம் ஆகும்.