India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியின்போது சிறப்பாக மற்றும் துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் செயலைப் பாராட்டி இன்று ஆவடி காவல் ஆணையர் கி. சங்கர் இ.கா.ப., அவர்கள் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள். இதில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்கள், காரவகைகள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும்போது. உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கான விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி வேளாண் பொறியியல் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. சிறு, குறு, பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மானியம், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு ஆட்சியர் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்துக் கொள்ளவும், புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்கள் மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துக் கொள்ளவும், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக அக்.24 11 மணி முதல் 5 மணி வரை உறுப்பினர்களை சேர்க்கை முகாம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்துக் கொள்ளவும், புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்கள் மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துக் கொள்ளவும், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக அக்.24 11 மணி முதல் 5 மணி வரை உறுப்பினர்களை சேர்க்கை முகாம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி வரும் போலி விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருங்கள்.
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நவம்பர் 7-ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் பயிற்சி பெற 8,10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.05.2024 முதல் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 30.09.2024 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே பழமையான கோவிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டு பிரிவினர், மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.கடம்பத்தூர் அடுத்த மப்பேட்டில் பழமையான ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.