India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை சேர்ந்த விஜயராணி, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே தங்கி தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அதேபோன்று தூத்துக்குடி சேர்ந்த முத்து பெருமாள் அதே பகுதியில் வேலை செய்து வருகிறார். இருவரும் காதலித்து உள்ளனர். இதில் திடீரென காதலி பேச மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் முத்து பெருமாள் கத்தியால் விஜயராணியை குத்தி தப்பிவுள்ளார். இதையடுத்து மப்பேடு போலீசார் முத்து பெருமாளை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக சஞ்சய் 21 என்ற இளைஞரை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இளைஞரை வெட்டிய சின்னராசு(30) வினோத் (28), இன்பநாதன் (47), செந்தமிழ் செல்வன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். சஞ்சய் ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து, சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை, வரும் 31ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக தொழிற்சாலை உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கானகட்டணத்தை www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும் என அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில், இன்று காலை தனியார் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, சிறப்புரை ஆற்றி, பேரணியை துவக்கி வைத்தார். உடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சூளூர்பேட்டையில் இருந்து நேற்று செங்குன்றத்திற்கு சுமார் 30 டன் நெல் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டு இருந்தது . அப்போது சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் கும்மடிபூண்டி அருகே உள்ள மேம்பாலத்தில் லாரி ஏறி செல்லும் போது, பாரம் தாங்காமல் நெல்மூட்டைகள் ஒரு பக்கமாக சரிந்த நிலையில், கட்டுபாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், அக்.01ஆம் தேதி முதல் அக்.30ஆம் வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9840756210/ 9444017528 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பதவிக்கு பணியிடம் 1 மட்டும் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு அடிப்படைத்தகுதி SSLC தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.