India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் C பிரிவில் உள்ள நபர்களுக்கும் இணைந்து, திருவள்ளூரில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் நவ.06-ல் மருத்துவ மதிப்பீட்டு முகாம் காலை 9.30 முதல் மாலை 1 மணிவரை நடைபெற உள்ளது என ஆட்சியர் அறிவிப்பு.
திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 34 லட்சத்து 58 ஆயிரத்து 524 வாக்காளர்கள். 4,74,744 வாக்காளர்களுடன் மிகப் பெரிய சட்டமன்ற தொகுதி மாதவரம். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் வரைவு வாக்காளர் பட்டியல் 2025 அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி www.fisheries.tn.gov.in இணையதளத்தில் செய்து கொள்ளலாம். விண்ணப்பபடிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் (மண்டலம்) சென்னை அலுவலகத்திலோ, உதவி இயக்குநர் திருவள்ளூர் (இருப்பு) பொன்னேரி அலுவலகத்திலோ, அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். உடன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 68 நிரந்தர பட்டாசு கடை உரிமத்தினை 2024-2025 ஆம் ஆண்டிற்காக புதுப்பிக்க சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் விண்ணப்பங்களை பெறப்பட்டு, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவாய் கோட்ட அலுவலர் நிபந்தனைகள் அடிப்படையில் 58 விண்ணப்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக பெறப்பட்டன, 48 கடைகளுக்கு உரிமை வழங்கப்பட்டது.
ஆர்கே பேட்டை அடுத்த பாலாபுரம் கதனநகரம் தியாகபுரம் ஜனகராஜ் குப்பம் உள்ளிட்ட பகுதியில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் கரும்புகள் சொந்த ஆலைகளில் எல்லாம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்போது வெல்லம் உற்பத்தி இரவு பகலாக முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒரு கிலோ வெல்லம் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் விபத்து நடந்த நேரத்தில் கவரைப்பேட்டை, பொன்னேரி பகுதிகளில் செல்போன் பேசிய சந்தேப்படும்படியான நபர்கள் சுமார் 200 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ் ஆப், டெலிகிராம், வி.பி. எண்ணை பயன்படுத்தி பேசிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.