India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருத்தணி முருகன் கோவிலில் பணியாளர் ரமேஷ் (47) என்பவர் மலைக் கோவில் விரைவு தரிசனம் வழியில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலையைச் சேர்ந்த அபிஷேக் (19) என்பவர் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்ய விடுமாறு தகராறு செய்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதையடுத்து, கோயில் பணியாளரை தாக்கி பிரச்னை செய்ததாக அபிஷேக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நேரத்தில், அதிகபட்சமாக திருத்தணியில் 17 மி.மீ. மழை பதிவு கும்மிடிப்பூண்டி 3மி.மீ பள்ளிப்பட்டு 5 மிமீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் பட்டாசு குப்பைகளை 44 தூய்மைப் பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள் 162 என 206 பேர் மூலமாக சேகரித்தனர். அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி 3.5 டன் மற்றும் நவம்–பர் 1 ஆம் தேதி 6 டன் என கடந்த 2 நாட்களாக 9.5 டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் எஸ்எச் லோன், சேலரி லோன், பெண்கள் இஎன்டிபி லோன், எம்எஸ்எம்இ லோன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் சுமார் ரூ. 103 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், ரூ. 336 லட்சம் நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிவந்த தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரை பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். இவர்கள் 6 பேர் மீதும் தொடர் புகார்கள் ஐஜிக்கு சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு யாரிடமும் இலவச பரிசு பொருட்கள் பெற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது?
Sorry, no posts matched your criteria.