India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமூக வலைதளங்களில் Trading மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் குறுஞ்செய்திகள் மற்றும் Link -ஐ நம்பி லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். முதலில் முதலீட்டிற்க்கு சிறு லாபத்தை கொடுத்து பின்னர் அதிக முதலீடு செய்ய சொல்லி எமாற்றுவர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவு
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 109 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அலுவலகத்திற்கு இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆகியவற்றிற்கு மருத்துவ உதவி கேட்டு பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்து 10 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பெற்றுத்தந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் C பிரிவில் உள்ள நபர்களுக்கும் இணைந்து, திருவள்ளூரில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மருத்துவ மதிப்பீட்டு முகாம் காலை 9.30 முதல் மாலை 1 மணிவரை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூரில் நவ.9ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜெயா கலை, அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து, 2024-25 ஆம் ஆண்டுக்கு 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த விண்ணப்பபடிவங்களை நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.