India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த Rapido பைக் ஓட்டுநர் சீனிவாசனிடம் அதிகாலையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 வெள்ளி மோதிரங்கள், செல்போன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாரத எழுத்தறிவுத்திட்டல் எழுத, படிக்க தெரியாத வயதானோர் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளிச்சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 17,500 பேருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று மாவட்டத்தில் 1,042 மையங்களில் நடைபெற்றது. இதில் 17,400 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் இன்று ஆவடி காவல் மாவட்டத்தில் பூந்தமல்லியில் உள்ள சுந்தரம் திருமண மஹாலில் காவல் ஆணையாளர் கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பூந்தமல்லி 11மி.மீ, கும்மிடிப்பூண்டி 8மி.மீ. செங்குன்றம் 4 மி.மீ., சோழவரம் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
திருவள்ளூரில் நவ.16ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜெயா கலை, அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆவடி சுற்றுவட்டாரத்தில் உள்ள பாஜக பிரமுகர் வெங்கடேசன் என்பவர் வீடு உள்பட 52 இடங்களில் சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர். போலி ஆவணங்களை வைத்து 2023ஆம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் நடந்த நில மோசடிகள் தொடர்பாக இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடப்பதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.