India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) காக்களூர் துணை மின் நிலையம், திருமழிசை துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்பட உள்ளன. இதனால், காக்களுர் தொழிற்பேட்டை, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஈக்காடு, பெரும்பாக்கம், திருப்பாச்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், திருமழிசை,வெள்ளவேடு, நேமம், மணம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.16) தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெறவுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநின்றவூரில் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 100க்கும் அதிகமாக நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் 15,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளன. https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சோழவரம் 24 மி.மீ. பூந்தமல்லி 18 மி.மீ. ஆவடி 16மி.மீ., தாமரைபாக்கம் 14 மி.மீ., செங்குன்றம் 13 மி.மீ., திருவள்ளூர் 9.2 மி.மீ., பொன்னேரி 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதளத்தில் குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பொறுத்தே ஒரு நாட்டின் எதிர்காலம் அமையும்.குழந்தைகளின் தவறுகளை அன்பால் திருத்துங்கள் என்ற ஜவஹர்லால் நேருவின் வரிகளை குழந்தைகள் தினத்தில் நினைவு கூறுவதோடு பாசிசம் இல்லாத நாளைய இந்தியாவை நம் எதிர்கால தலைமுறையான இன்றைய குழந்தைகளுக்கு வழங்க சூளுரையேற்போம் என பதிவு.
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் குறிப்பிடவும்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருது பெற பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள், இதற்கான விண்ணப்பத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டி 65 மி.மீ., தாமரைபக்கம் 59 மி.மீ., செங்குன்றம் 37.6 மி.மீ., பொன்னேரி 36 மி.மீ., ஆவடி 34 மி.மீ., சோழவரம் 32 மி.மீ., பூந்தமல்லி 27மி.மீ ஊத்துக்கோட்டை 26 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.