Thiruvallur

News November 17, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பதிவு நிலவரம்

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருவள்ளுர் 10 மி. மீ, கும்மிடிப்பூண்டி 21 மி. மீ, பொன்னேரி 11 மி. மீ, செங்குன்றம் 5 மி. மீ, பூண்டி 5 மி. மீ, திருவாலங்காடு 10 மி. மீ, திருத்தணி 46 மி. மீ, ஊத்துக்கோட்டை 6 மி. மீ, பூந்தமல்லி 0, சோழவரம் 8 மி. மீ, தாமரைப்பாக்கம் 6 மி. மீ ஆகிய பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

News November 17, 2024

திருவள்ளூர் அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் வியாபாரத்திற்காக ஆவடி வந்தார்.வியாபாரத்தை முடித்து விட்டு திரும்பிய போது,ஆவடி அருகே தண்ணீர்குளம் பகுதியில் உள்ள டெலிபோன் கமபத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. விபத்து நிகழ்ந்த போது ஏர் பேக் திறக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News November 17, 2024

திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம் மார்ச்சில் திறப்பு?

image

திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கர் நிலத்தில், 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையப் பணி கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது.பணிகள் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில்,நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரை பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.இதையடுத்து,40 சதவீத பணிகள் முடிவடைந்தன.வரும் மார்ச் மாதத்தில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 16, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 16, 2024

ராமாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

image

காக்களூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் ஆவடி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கார் நிலைத்தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறிது காயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்ட பைக் மீது கார் மோதியது. தகவல் அறிந்ததும் செவ்வாபேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 16, 2024

இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் இன்றும் , நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. ஷேர் செய்யவும்

News November 16, 2024

திருவள்ளூரில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News November 15, 2024

திருவள்ளூர் மாவட்ட மழைப்பதிவு நிலவரம்

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டி 60மி.மீ., பொன்னேரி 29 மி.மீ., செங்குன்றம் 27.6மி.மீ., பூண்டி 25மி.மீ., திருத்தணி 23மி.மீ., ஊத்துக்கோட்டை 19மி.மீ., பூந்தமல்லி 17மி.மீ., சோழவரம் 11மி.மீ., ஆவடி 12மி.மீ தாமரைபாக்கம் 9மி.மீமழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!