India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (38).பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடைக்கு எதிரே டிபன் கடை இருக்கிறது.கடந்த 17-ம் தேதி பால்ராஜ் உறங்கி கொண்டிருந்த போது டிபன் கடை உரிமையாளரின் மகன் தனுஷ், பால்ராஜின் அறை கதவை தட்டினார்.கதவை திறந்தவுடன் தனுஷ் கத்தியால் பால்ராஜ் கழுத்தில் குத்தினார்.இதில் பால்ராஜ் படுகாயமடைந்தார்.புகாரின் பேரில் போலீசார் நேற்று தனுஷை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலக வளாகத்தில் வரும் நவ.22ம் தேதி காலை10 மணி யளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருமுல்லைவாயல் மகளிர் தொழில் பூங்காவில் புதிதாக தொழில் தொடங்க தொழிற்மனைகளை விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in வாங்க இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் இணையதளத்தின் வாயிலாகவே விவரங்களை தெரிந்து கொண்டு தேவையானவற்றை நவ.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மக்களிடம் இருந்து 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அண்மையில் நோட்டீஸ் ஒட்டினர். ஆக்கிரமித்து கட்டிய தனது வீட்டை அதிகாரிகள் இடித்து விடுவார்கள் என்ற சோகத்தில் தனது வீட்டில் கார்பெண்டர் சங்கர்(40) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் பெற்ற பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் இணைப்பு சக்கர வாகனங்கள் பழுதடைந்திருந்தால், மீண்டும் புதிய வாகனம் பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நவ.22 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.