Thiruvallur

News February 5, 2025

GBS நோய் என்றால் என்ன?

image

GBS நோய் என்பது பாக்டீரியா / வைரஸால் ஏற்படும் பாதிப்பாகும். தரமற்ற உணவு, மாசுபட்ட நீர், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், தடுப்பூசியால் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். பிறகு நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் மூட்டு வலி, முதுகு வலி, கை, கால்கள் மரத்து போதல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுவதிலும் சிரமம் ஏற்படும்.

News February 5, 2025

ரூ.10 லட்சம் இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

image

பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட வயலாநல்லுாரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். ‘ஆன்லைன் ரம்மி’ விளையாடி வந்த இவர், ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வன், நேற்று முன்தினம் (பிப்.3) திருவள்ளூர் – ஏகாட்டூர் இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 5, 2025

GBS நோயால் 9 வயது சிறுவன் பலி

image

திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் மைதீஸ்வரன், அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு, கால்களில் உணர்ச்சியின்மை ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தான். பரிசோதனையில் ‘கிலன் பா சின்ட்ரோம்’ எனும் GBS நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

News February 4, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பதிவு

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் சைபர் குற்றவாளிகள் வலையிலிருந்து தப்பிக்க மக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய குறித்து மேலேயுள்ள புகைப்படத்தில் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சைபர் குற்றவாளிகளின் வலையில் நீங்கள் சிக்கி விட்டீர்கள் என்றால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News February 4, 2025

திருவள்ளூர் புதிய மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்றார்  

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்கள் இன்று காலை 10:45 மணி அளவில் பதவி ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மக்களுக்கான அடிப்படை வசதிகள் விரைந்து செய்து கொடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News February 4, 2025

முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி

image

திருவாலங்காடு முத்துக்கொண்டாபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 46. முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று காலை, திருவள்ளூரில் உள்ள வங்கியில் பணம் எடுக்க, இரு சக்கர வாகனத்தில் அத்திப்பட்டு ராமலிங்காபுரம் சாலை வழியாக சென்றார். ராமலிங்காபுரம் சென்ற போது எதிரே வந்த, ‘வோக்ஸ்வாகன்’ கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார்.

News February 4, 2025

பெரியபாளையம் அருகே குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

image

பெரியபாளையத்தை அடுத்த, கொசவன் பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவிலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51; நேற்று முன்தினம் மதியம் முதல், இவரை காணவில்லை.  பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்தார். பெரியபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பிரசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 4, 2025

காட்டுப்பள்ளியில் லாரி மோதி ஆசிரியர் பலி

image

கும்மிடிப்பூண்டி அடுத்த, தேர்வாய் சேர்ந்தவர் அரசன்,இவர், மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், தற்காலிக கணினி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, பள்ளி செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் வல்லுார் – காட்டுப்பள்ளி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். எண்ணுார் காமராஜர் துறைமுகம் அருகே சரக்கு ஏற்றி வந்த, லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அரசன் உயிரிழந்தார்.

News February 3, 2025

மெட்ரோ திட்டம் ஓராண்டில் முடிக்கப்படும் 

image

இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் ஐந்தாவது வழித்தடமாக மாதவரம் பால் பண்ணை முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டது. 168.16 கோடி மதிப்பீட்டில் ஜாக்சன் லிமிடெட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி ஓராண்டுக்குள் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார். 

error: Content is protected !!