Thiruvallur

News February 11, 2025

நலிவுற்ற பெண்களும் இனி சுயதொழில் தொடங்கலாம

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக தமிழக அரசு அவர்களுக்கு வங்கி கடன் மற்றும் சுய தொழிலுக்கான பயிற்சிகள் அளித்து வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 11, 2025

1,124 காலிப் பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள்.<> ஷேர் பண்ணுங்க<<>>

News February 11, 2025

விரைவு ரயில் மோதி முதியவர் பலி

image

புளியந்தோப்பபைச் சேர்ந்தவர் மகிமைதாஸ் (68). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற, நேற்று காலை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வந்தார். அப்போது, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் இன்ஜினின் கீழ் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால் திருவள்ளூர் – சென்ட்ரல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

News February 10, 2025

RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 10, 2025

திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தற்கொலை

image

திருத்தணி ஒன்றியம், தெக்களூர் சேர்ந்தவர் வாஞ்சிநாதன். அதே பகுதியைச் சேர்ந்த கவிதா. இருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி, 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டு அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கவிதாவை பெற்றோர் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்டுள்ளார். 

News February 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 9, 2025

ஊழியர்களை கண்டித்ததால் மேலாளர் அடித்து கொலை

image

மணலி புதுநகரில் 4 நாட்கள் வேலைக்கு வராததால், ஊழியர்களை மேலாளர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் மேலாளரை சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெய்னர் பெட்டக மேலாளரான சாய் பிரசாத்தை, மது போதையில் சுத்தியால் தாக்கிவிட்டு 2 இளைஞர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2025

2 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

image

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதேப் பகுதியியைச் சேர்ந்த சஞ்சயை கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்தார். சஞ்சய், ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதேபோல், மற்றோரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜியும் கைது செய்யப்பட்டார்.

News February 8, 2025

திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை பதிவு

image

திருவள்ளூர்மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் கல்வி உதவித்தொகை மோசடி ஆன்லைன் மோசடிகாரர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துருக்கிறது. அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்க்கு அனுப்பவதாக கூறி Account Number, OTP, QR Code- கேட்டு அழைப்பு வந்தால் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு: 20,000 காலிப்பணியிடங்கள்

image

மாதவரத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்.8) நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 20,000+ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!