India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணலி பல்ஜி பாளையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன், சரவணகுமார் பணியாற்றி வந்தனர். நேற்று (பிப்.15) ஆலையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (பிப்.17) பல்வேறு பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, ஆர்.கே.பேட்டை, அம்மனேரி, கொண்டாபுரம், அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை,, பாண்டரவேடு, மேலப்பூடி, பள்ளிப்பட்டு, கர்லம்பாக்கம், நொச்சிலி, நெடியம், கொள்த்தூர், சாணாகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த எம்.ஆனந்த் (17) பிளஸ் 2 படித்து வருகிறார். கம்பியூட்டரில் தமிழ், ஆங்கிலம் டைப்பிங்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக கற்று வரும் ஆனந்த் தமிழகத்தில் முதல் முறையாக மாநில அரசு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை கணினி வழியில் எழுத தேர்வாகி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் பல் மருத்துவர், ‘டேட்டா’ மேலாளர், லேப் உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்களை tiruvallur.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றுகளுடன் பிப்ரவரி 28க்குள் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகரில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கிழக்கு நோக்கியபடி இருக்கும் ஆஞ்சநேய சுவாமியின் முகம், பாவங்களை நீக்கி, தூய்மையான மனதைக் கொடுக்கும். உடலில் உள்ள எல்லா விஷத் தன்மையையும் நீக்கும். வடக்கு நோக்கிய லட்சுமி வராக சுவாமியின் முகம் கிரக தோஷங்களை போக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
ஊத்துக்கோட்டை,வெங்கல் அருகே உள்ள மேல்செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர், நேற்று முன்தினம் (பிப்.13) தனது விவசாயத்தை நிலத்தை ஏர் உழுது கொண்டு இருந்தார். அப்போது, டிராக்டர் சேற்றில் சிக்கி கொண்டது. டிராக்டரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, டிராக்டர் அவர் மீது கவிழ்ந்தது. இதில் அவர் டிராக்டரின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்பாக்கத்தில் வனத்துறை இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் வீடுகளை இடிப்பதற்கு நேற்று (பிப்.14) வந்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்கக் கூடாது என போராட்டம் நடத்தியவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகளை இடிக்கப்படும்போது, பொதுமக்கள் கண்ணீருடன் அழைத்து செல்லப்பட்டது கண்கலங்க வைத்தது.
புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி (47). அதிமுக வட்டச் செயலாளரான இவர், நேற்று மாலை தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை கவனித்த அவரது மனைவி, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.எஸ். கோவிந்தராஜனை, கட்சி தலைமை அந்த பதவியில் இருந்து விடுவித்தது. அவருக்கு பதிலாக எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் என்பவரை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் துறை முருகன் நேற்று (பிப்.13) அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளருக்கு மற்ற நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.